பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T. அன்புள்ள இளவரசனுக்கு. ஆனால் இப்பொழுது, கேள்வி என்னுஞ் சொல் வினா என்னும் பொருளில் வருவதைக் காண்கிறோம். இது பெரும்பான்மை வழக்கா கி விட்டது. நீயும் உன் மடலில் அப்பொருளில் தான் வழங்கியிருக்கிறாய். பள்ளிகளில் கல்லூரி களி ல் வினாத் தாள் என்று கூறு தற்கு மாறாக க் கே ள் வித் தாள் என்று தான் பெரும்பாலாக வழங்கி வருகிறோம். வாய் விட்டு க் கேட்டான்; நான் கொடுத்து விட்டேன்’ என்று மக்கள் பேச்சு வழக்கிலும் வினவுதல், வேண்டுதல் என்னும் பொருளிற்றான் கேள்வி யென்னுஞ் சொல் வருகிறது. “த ட் டுங்கள் திறக் கப்படும் கேளுங்கள் கொடுக் கப்படும்” - என்ற சொற் றொடரை அடிக்க டி கேட்டிருப் பாய். இங்கே கேளுங்கள் என்ற சொல் எப்பொருளில் வருகிறது ? வா யி னாற் கேளுங்க ள் என்று தானே பொருள் ? ஆகவே, முதலிற் செவியின் தொழிலாக இருந்த கேட்டல்’, பிற்காலத்தே வாயின் தொழிலாகிய வினவுதல் வேண்டல் என்னும் பொருளுக்கு மாறி வந்து விட்டது. காலப் போக்கு இவ்வாறு மாற்றத்தைத் தந்து விட்டது. இவ்வாறு வழங்கு வது தவறு என ச் சிலர் கூறுவர். செவியின் தொழிலை வாயின் தொழிலாகக் கூறுவது சரியா தவறா எனத் தெரிந்து கொள்வது நல்லது. சரி என்பது தான் எ ன் கருத்து. நாம் இப் படி வழங்குவதற்கு முன்னரே, மணிமேகலை ஆசிரியர் சாத்தனார், வாயின் தொழிலாகவே, கேட்டல் என்னுஞ் l _