பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FT नाः (கவியரசர் முடியரசன் 75 _ -- - - - --- நாம் தமிழ் வழிபாடு வேண்டுமென்று எந்த நாட்டிற் கூறுகின்றோம் ? தமிழ் மக்களால் வழிபடப்படுகின்ற தமிழ்நாட்டுக் கடவுளர்க்குத் தமிழ் நாட்டிலே தமிழ் வழிபாடு வேண்டுமென்று விளம்புகின்றோம். இந்தியாவி துள்ள பிற மாநிலங்களிலோ, இங்கிலாந்திலோ, அமெரிக்கா விலோ, சப்பானிலோ தமிழ் வழிபாடு வேண்டுமென்று கூறவில்லை. நம் வேண்டுகோளைப் பிற மாநிலத்தாரோ பிறநாட்டினரோ எதிர்க்கவில்லை. நம் நாட்டினரே ாதிர்க்கின்றனர். இந்நிலை கண்டு இரங்குவது தவிர வேறென்ன செய்ய இயலும் ? சைவப் பெருமக்கள் உச்சிமேல் வைத்துப் போற்று கின்ற பெரிய புராணத்தில், 'அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் து மறை பாடும் வாயான்’ என்று ஒரு பாடற் பகுதி வருகிறது. அதில் தமிழ்ப் பாட்டால் என்னை அருச்சித்து வழிபடு என்று சிவ பெருமானே கூறியதாகச் சொல்லப்படுகிறது. அவ்வா மிருந்தும் நம் பச்சைத் தமிழர், தமிழைக் கேட்டால் இறைவன் செத்து விடுவான் என்று கூறுகிறாரே ! அவருடைய பக்தியை, அறிவை அய்யுற வேண்டியுளது. 1958-ஆம் ஆண்டு, 'எழில்’ என்ற இதழில் பாண்டி நாடன்' என்ற புனைபெயரில் இரண்டு கட்டுரைகள் تیمه ه عدها به هم وی قاپو وجهه سی و نه ماهه - مه ۱۹ ه " തത്.ണി - ജിം കു భూg