பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SuSuS கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இக் கொழி தமிழ்ப் பெருமை யார் அறிவார் ? (மதுரைக் கலம்பகம் 92) எனக் குமரகுருபரர் கூறுவதிலிருந்து சிவபெருமான் குடும்பமே தமிழை விரும்பும் குடும்பம் எனத் தெரிந்து கொள்கிறோம். சிவன், சவுந்தரமாறனாகவும் உமைதடாதகா தேவியாகவும் முருகன், உக்கிரகுமார பாண்டிய னாகவும் மதுரையில் தோன்றிய காரணம் தமிழ்ச் சுவையைக் குடும்பத்துடன் கூடியுண்ண வேண்டும் என்ற வேட்கைதான் என்பது அப்பாடலின் பொருள். மேலும் முருகப் பெருமானைப் பற்றி, முத்தமிழால் வை தோரையும் வாழ வைப்பவன் என்று குறிப்பிடுவர் ஆன்றோர். தமிழால் வைதோரையே வாழ வைப்பவன் என்றால் தமிழால் வாழ்த்துவோரை வாழ வைக்காமல் விடுவானோ ? மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் மீனாட்சியைக் குறிப்பிடும் பொழுது, " தொடுக்கும் கடவுட் பழம் பாடல் தொடையின் பயனே நறைபழுத்த துறைத்திந் தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே” என்று குமரகுருபரர் குறிப்பிடுகின்றார். இந்நூலைத் திருமலை நாயக்கர் முன் அரங்கேற்று பொழுது,