பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== அன்புள்ள இளவரசனுக்கு * = + கொண்டார். நடையைக் கட்டினார். அவர் வாழ்க்கைத் துணைவி இலக்குமி குறுக்கிட்டு, ‘என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் படுக் கையும் கையுமாகப் புறப் பட்டு விட்டீர்களே ! எவ்வளவு தூர மோ ? அந்தப் பழக்கம் இன்னும் உங்களை விட்டுப் போகவில்லையோ ?’ என்று கேலியாகப் பேசிச் சிரித்தார்கள். "திருமகளே ! நகை மொழி பேசும் நேரம் இதுவன்று. என் அன்பன் திருமழிசைக்காகச் செல்கின்றேன். அவன் மனம் நொந்து தொண்டை மண்டலத்தை விட்டு வெளியேறுகிறான். அவன் பின்னே நானும் செல்லத் துணிந்து விட்டேன். நீ வேறொன்றும் தவறாகக் கருதாதே ! 'உயிர்த் துணைவரே ! யாரோ ஒருவன் போகின்றான் என்பதற்காக உங்கள் குடும்பத்தை - குடியிருந்த ஊரை விட்டு வெளியேறுவதா ? ஏன் இப்படியெல்லாம் பித்துப் பிடித்தாற்போல நடந்து கொள்கிறீர்கள் ? என்று மனம் வருந்திக் கேட்டார் இலக்குமி. 'மலர்மங்கை ! யாரோ ஒருவன் என்று அவ்வளவு எளிமையாகச் சொல்லி விடாதே. அவன் என் உயிரனை யான். உண்மைத் தொண்டன். தொண்டனுக்கு நான் தொண்டன் என்பதை நீ உணராயா ? மேலும் அவன் வாயிலிருந்து வெளிவரும் தமிழ் மொழிக்காக - தமிழ்ப் பாடலுக்காக அவன் பின் னே ஒடுகிறேன். பித்துப் பிடித்தாற்போல நடந்து கொள்கிறேன் என்று என்னைப் பற்றி நீ கூறியது முற்றிலும் உண்மை. என் அன்பனுடைய திருவாய் மொழியிலே, தமிழ் மொழியிலே எனக்கு அளவு கடந்த பித்துத்தான். அந்தப் பித்துப்பிடித்த காரணத்தால்