உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள இளவரசனுக்கு ...] “அந்தோ ! இப் படியா கும் என்று தெரியாது பிழை புரிந்து விட்டோமே ! வருக அமைச்சரே ! நாமும் பின்னே சென்று மன்னிப்பு வேண்டித் திரும்ப அழைத்து வருவோம்”. மன்னன், அமைச்சரும், வீரரும் புடைசூழ விரைந்து சென்றான். ஆழ்வாரைக் கண்டு வணங்கி, "ஐயன்மீர் பிழை பொறுத்து, நாட்டுக்கு எழுந்தருள வேண்டுகிறேன்” என மன்றாடி நின்றனன். 'அன்பனே ! என்னை வேண்டுவதிற் பலனில்லை. என் மாணவமணி கணிகண்ணனை வேண்டிக் கொள். அவன் விருப்பத்தைப் பொறுத்தது இது என விடை யிறுத்தனர் ஆழ்வார். காவலன் கணி கண்ணனிடம் ஒடினான். பெரியீர்! அறியாது பிழை புரிந்தேன். சிறியேன் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும். நாட்டுக்காக நாட்டு மக்களுக் காகத் தாம் திரும் பி யருள வேண்டு கிறேன் எனக் கண்ணிர் மல்கக் கெஞ்சி நின்றனன். “மன் ன வ ! தமிழைப் பிழைத்த நாடு - தமிழைப் புறக் கணித்த நாடு எவ்வளவு தொல் ைலகளுக்கு ஆளாகி விட்டது பார்த்தாயா ? இனியேனும் தமிழைப் பழிக்காதே தமிழ்ப்புலவனை இகழாதே ! இப்பொழுது நீயே குற்றம் உணர்ந்தனை. நான் நாடு திரும்புகின்றேன். “இணர் எரி தோய் வன்ன இன்னா செயினும், புனரின் வெகுளாமை நன்று என்பதை உணர்ந்ததால் உன்னை