பக்கம்:குமண வள்ளல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8. வாள் தந்த வளம்

ளங் குமணன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டான். நாடு முழுவதும் இப்போது அவனுடையது ஆகிவிட்டது. நாட்டில் உள்ள மக்கள் அவனை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் அவர்களை ஆளும் உரிமையைப் பெற்றுவிட்டான். அவனுடைய போக்குக்கு ஏற்பப் பேசி அவன் தீய எண்ணங்களுக்கு உரமூட்டித் துணை நிற்கும் நண்பர் பலர் சேர்ந்தனர். புலவர்கள் ஒவ்வொரு நாளும் வந்து அளவளாவியதால் எப்போதும் தமிழ் ஓசை கேட்ட அந்த அரண்மனையில் இப்போது தமிழ்ப் புலவர்களின் காட்சி அரிதாகிவிட்டது.

மக்கள் அவனுடைய இழிகுணத்தை எண்ணி வெறுத்தனர். அவன் உண்டு, அவனுடைய நண்பர்கள் உண்டு; அவர்களோடு பேசிப் பேசிக் காலம் கழித்தான். எங்கும் போவதில்லை.

அவனும் அவன் நண்பர்களும் பேச என்ன இருக்கிறது? நல்ல செயல்களைப்பற்றி எண்ணும் உள்ளங்களானால் எத்தனையோ நினைக்கலாம்; செய்யலாம். கொடுமனக் கசடருக்குத் தோன்றுவன யாவும் பிறருக்குத் தீங்கு உண்டாக்கும் நினைவாகவே இருக்கும்.

அவர்கள் கூடிக்கூடிப் பேசினர்கள், "என்னுடைய அண்ணன் காட்டில் இருக்கிறானே; அவன் மறுபடியும் நாட்டுக்கு வந்து ஆட்சியைப் பெற முயன்றாலும் முயலலாமோ?’ ......இப்படி ஓர் ஐய வினாவை இளங்குமணன் எழுப்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/93&oldid=1359250" இலிருந்து மீள்விக்கப்பட்டது