இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
168
செருந்தி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | டிஸ்கிபுளோரே (Disciflorae) |
தாவரக் குடும்பம் | : | ஆக்னேசி (Ochnaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | ஆக்னா (Ochna) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஸ்குவரோசா (squarrosa) |
சங்க இலக்கியப் பெயர் | : | செருந்தி |
உலக வழக்குப் பெயர் | : | சிலந்தி என்பர் காம்பிள் |
தாவர இயல்பு | : | சிறு மரம்; பழுப்பு நிறமானப் பட்டையும், செம்பழுப்பு நிறமான மரத்தையும் உடையது. |
இலை | : | தனி இலை; மெல்லியது; பசியது; தலை கீழான முட்டை வடிவினது; இலைக் காம்பு குட்டையானது; இலை நுனி கூரியது. |
மஞ்சரி | : | நுனி வளராப் பூந்துணர் பொன் மஞ்சள் நிறமான எடுப்பான தோற்றமுள்ள பூங்கொத்து. |
புல்லி வட்டம் | : | 5 புறவிதழ்கள் உதிராது ஒட்டிக் கொண்டிருக்கும். மஞ்சள் நிறமானது. |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள்; பொன்னிறமானவை. மடல் விரிந்து அழகாகத் தோன்றும்; அடியில் வட்டத்தட்டு இருக்கும். |
மகரந்த வட்டம் | : | பல எண்ணற்ற தாதிழைகள் அகவிதழ்களுக்குள் அடங்கியிருக்கும். தாதிழைகள் உதிர மாட்டா; தாதுப் பைகள் நீளமானவை. |
சூலக வட்டம் | : | மூன்று முதல் பத்து வரை ஆழ்ந்த பிளவான சூலகம்; ஒவ்வொரு பிளவும் ஒரு செல்லுடையது; சூல் தண்டு அடியொட்டி இருக்கும்; சூல்முடி நுண்ணியது. |
கனி | : | 3-10 ‘ட்ருப்’ எனப்படும் சதைக் கனி. நீண்ட விதைகள் நேராக அமைந்திருக்கும்; வித்திலைகள் தடித்தவை. |