இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
197
கவிர்—முள்முருக்கு—கலியாணமுருங்கை தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுப்பு | : | காலிசிபுளோரே-அகவிதழ் பிரிந்தவை |
தாவரப் பேரினப் பெயர் | : | எரித்ரைனா ((Erithrina) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | இன்டிகா (indica) |
தாவர இயல்பு | : | மரம் உயர்ந்து வளரும். வலியற்றது. தண்டில் சிறிய முட்கள் காணப்படும். |
தாவர வளரியல்பு | : | அகன்ற பெரிய மூன்று திட்டு வடிவச் சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலை. காம்பு 10-15 செ. மீ. நீளமானது. இலையடிச் செதில்கள் உள்ளன. இலையடிச் சிறு செதில்கள் சுரப்பி போன்றிருக்கும். |
இலை | : | மீசோபைட் |
மஞ்சரி | : | 12-15 செ.மீ. நீளமுள்ள நுனி வளர் பூந்துணர் இலைக் கோணத்தில் அல்லது கிளை நுனியில் உண்டாகும். |
மலர் | : | பெரியது. நல்ல சிவப்பு நிறமானது. இணரில் நெருக்கமாக இருக்கும். மலரடிச் செதில்கள் உள்ளன. |
புல்லி வட்டம் | : | 5 பசிய இதழ்கள் |
அல்லி வட்டம் | : | 5 செவ்விய இதழ்கள். பதாகை இதழ் 5-7 செ. மீ. நீளமானது. சிறகிதழ்கள் இருபுறமும் சிறியவை. கீல் இதழ்கள் இரண்டும் நீண்டிருக்கும். |
மகரந்த வட்டம் | : | 10 தாதிழைகள் |
சூலக வட்டம் | : | இரு சூலிலை ஓரறைச் சூலகம். பல சூல்கள். சூல்தண்டு நுனியில் வளைவானது. சூல்முடி தடித்தது. |
கனி | : | ஒரு புற வெடி கனி. 15-30 செ. மீ நீளமானது. விதை முட்டை வடிவானது. ஹைலம் பக்கவாட்டிலிருக்கும் |
இதன் அடிமரம் மென்மையானது. வெண்ணிறமானது. கிளைகளை வேலிக்கு நட்டு வளர்ப்பர். தமிழ் நாட்டில் காணப்