இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
229
புன்கு தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரே-அகவிதழ் பிரிந்தவை |
தாவரத் துணைக் குடும்பம் | : | பாப்பிலியோனேட்டே (Papilionatae) |
தாவரப் பேரினப் பெயர் | : | பொங்காமியா (Pongamia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | கிளாப்ரா (glabra) |
சங்க இலக்கியப் பெயர் | : | புன்கு |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் | : | புன்கம் |
உலக வழக்குப் பெயர் | : | புங்க மரம், புன்கம் |
தாவர இயல்பு | : | சிறு மரம், 7-10 மீ. உயரமானது. நன்கு கிளைத்துத் தழைத்து வளர்வது. என்றும் பசிய இலைகளையுடையது. |
இலை | : | சிற்றிலைகளை உடைய கூட்டிலை. எதிரடுக்கானது. இலைச் செதில்கள் சிறியவை. சிற்றிலைகள் நீள் முட்டை வடிவானது. |
மஞ்சரி | : | நுனி வளர் பூந்துணர் இலைக் கோணத்தில் உண்டாகும். கொத்தாகக் காணப்படும். |
மலர் | : | அவரைப்பூப் போன்றது. மலரடிச் செதில்கள் நுண்ணியவை. விரைவில் உதிர்ந்து விடும். |
புல்லி வட்டம் | : | 5 பசிய புறவிதழ்கள் இணைந்து புனல் வடிவாக இருக்கும். |
அல்லி வட்டம் | : | அகவிதழ்கள் 5, பதாகை இதழ் சற்று முட்டை வடிவானது. மேலே மடிந்து வளைந்திருக்கும். சிறகிதழ்கள் இரண்டும் இரு பக்கத்திலும் உள்ளன. ஒரு புறமாக நீண்டிருக்கும். அடியில் பட- |