இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
269
ஆர்—மந்தாரம் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம். அல்லி விரிந்தது. |
தாவரத் தொகுதி | : | காலிசிபுளோரேயில் ரோசேலீஸ் (Rosales) |
தாவரக் குடும்பம் | : | சீசல் பினியே (Caesalpinieae) |
தாவரப் பேரினப் பெயர் | : | பாகினியா (Bauhinia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | பர்பூரியா (purpurea) |
தாவர இயல்பு | : | மீசோபைட் |
இலை | : | மிக அகன்றது; இரு நீண்ட சிற்றிலைகளும் அடி ஒட்டி இருக்கும். |
மஞ்சரி | : | தனி மலர் அல்லது கலப்பு மஞ்சரியாகக் கிளை துனியில் உண்டாகும். |
மலர் | : | வெளிர் மஞ்சள் நிறமானது, நறுமணமுள்ள, சற்று நீளமானது. ஐந்தடுக்கானது..அகவிதழ்கள் ஒரே அளவுள்ளவை. இருபக்கச் சமச்சீரானது. |
புல்லி வட்டம் | : | 5 சிறு விளிம்புகள் பசுமையானவை. |
அல்லி வட்டம் | : | 5 நீளமான ஒரே மாதிரியானவை. மேல் இதழ் உட்புறமானது. |
மகரந்த வட்டம் | : | பொதுவாக 10 இருக்கும். இவை அருகிப் போய் ஒன்று மட்டும் காணப்படும். |
சூலக வட்டம் | : | ஒரு சூலிலைச் சூலகம். பல சூல்கள். |
சூல் தண்டு | : | மெல்லியது: குறுகியது சூல்முடி. |
கனி | : | வெடியாத உலர்கனி, பட்டையானது. |
விதை | : | முட்டை வடிவானது. ஆல்புமின் உள்ளது. |
இச்சிறு மரம் மலருக்காகக் கோயில்களிலும், அழகுக்காகப் பூந்தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதனைத் திருவாத்தி என்றும், வெள்ளை மந்தாரை என்றும் கூறுவர்.