இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
350
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஈஜிப்டிகா (aegyptica) |
தாவர இயல்பு | : | கிளைத்துப் படரும் ஏறுகொடி; நீளமானது, ஓராண்டுக் கொடி. |
இலை | : | தனியிலை; அகலமானது; 5-7 பிளவுகளை உடையது. |
மஞ்சரியும் மலரும் | : | பால் வேறுபாடுள்ள தனித் தனி மலர்கள் மஞ்சள் நிறமானவை; ஆண் மலர் நுனிவளர் பூந்துணரில் பூக்கும்; பெண்மலர் தனியாக இலைக் கோணத்தில் உண்டாகும். |
புல்லி வட்டம் | : | ஐந்து புல்லிகள் ஆண்மலரில் இணைந்து, புனல் வடிவமாக இருக்கும். பெண் மலரில் நீண்ட குழல் வடிவாக இருக்கும்; சூலகத்தை முற்றிலும் மூடியிருக்கும். |
அல்லி வட்டம் | : | இருபாலான மலர்களும் மஞ்சள் நிறமானவை; அகவிதழ்கள் அடியில் இணைந்திருக்கும். மேலே இவை 5 மடல்களாகப் பிளவுபட்டு இருக்கும். |
மகரந்த வட்டம் | : | ஆண் பூவில் 3-5 தாதிழைகள் புல்லியின் அடியில் இணைந்துள்ளன. தாதுப்பைகள் தனித்து நன்கு வெளிப்பட்டிருக்கும். தாதுப்பை இணைப்பு அகன்றது; பெண் பூவில் 3 மலட்டுத் தாதிழைகள் காணப்படும். |
சூலக வட்டம் | : | மூன்று சூலிலைகளை உடைய ஓரறைச் சூலகம். பல சூல்கள் உண்டாகும். |
சூல் தண்டு | : | பெண் பூவில் மட்டும் உண்டு. கம்பி போன்றது. சூல்முடி 3 பிளவானது. |
கனி | : | நீளமான, தடித்த, பசிய காய். புறத்தில் 10 நீண்ட விளிம்புகளைச் சுற்றிலும் உடையது |
விதை | : | பல கரிய பட்டையான விதைகள். |
இதன் காய் உணவுக்குப் பயன்படும். இதனால் இது தமிழ்நாட்டில் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. வீட்டுக் கூரைகளிலும், வேலிகளிலும் படர்ந்து வளரும்.