இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
376
வளராப் பூந்துணர் அடர்ந்த கொத்தாக உண்டாகும். பூங்கொத்து பெரும்பாலும் வட்டமாகத் தோன்றும். | ||
மலர் | : | வெண்ணிறமானது. நறுமணம் உடையது. மலர்ச்செதில்கள் உள்ளன. |
புல்லி வட்டம் | : | 5 பிரிவுள்ள புறவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள் இணைந்து குழல் வடிவாக உள்ளது. உள்ளே நுண்மயிர்கள் உள. நுனியில் 5 பிரிவானது. இடப்புறமாகச் சுற்றிய அடுக்கானது. மேலே: மடல்கள் விரிந்துள்ளன. |
மகரந்த வட்டம் | : | 5 தாதுக்கால்கள். இழை போன்றவை
தாதுப்பைகள் நீளமானவை. |
சூலக வட்டம் | : | இரு சூலிலைச் சூலகம். பல சூல்கள் தடுப்புச் சுவரில் ஒட்டியிருக்கும். சூல் தண்டு மெல்லியது. சூல்முடி இரு பிளவானது. |
கனி | : | சிவந்த ‘பெர்ரி’ எனப்படும் சதைக்கனி. |
விதைகள் | : | ஆரஞ்சு நிறமானவை சொர சொரப்பானவை. ஆல்புமின் உள்ளவை. |
மலைப்புறக் காடுகளிலும் குன்றுகளிலும் வளரும் அடித்தண்டு கருமை சார்ந்த வெளிர் நிறமானது. வலிமையுள்ளது. பெரிதும் வேலிகட்குப் பயன்படுகிறது .
இதன் குரோமோசோம் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை. இப்பேரினத்தில் உள்ள பிற சிற்றினங்களின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 ஆகும்.