இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
542
சங்க இலக்கியத்
கிளைத்தல் | : | 3-4 மீட்டர் உயரத்திற்கு மேல் சிறு கிளைகள் காணப்படும். |
இலை | : | பெரிய கூட்டிலை. 2-3 சிறகமைப்பானது. எதிரடுக்கு 60 முதல் 80 செ. மீ. நீளமானது. |
சிற்றிலை வடிவம் | : | ஈட்டி முனை போன்றது. |
விளிம்பு | : | அரை வட்டப் பற்களை உடையது. |
நுனி | : | நீண்டு கூரியது. |
பரப்பு | : | பசியது, பளபளப்பானது. |
காம்பு | : | மிகச் சிறியது. நுனி இலை காம்பு இல்லாதது போல் இருக்கும். |
மஞ்சரி | : | ‘காரிம்போஸ் பானிக்கிள்’ என்ற கலப்பு மஞ்சரி. 20-25 செ. மீ. நீளமும், 10-15 செ.மீ. அகலமும், 5-8 செ. மீ, நீளமானது. |
மலர் | : | மலரடிச் செதில் தோற்றமில்லாதது. நீளமான 5 அடுக்கான, வெண்மையான, மணமுள்ள பல மலர்கள் உண்டாகும். |
புல்லி வட்டம் | : | புல்லிகள் மிகச் சிறியவை. 5 பற்கள் போன்றவை. 1-2 மி. மீ. நீளம். |
அல்லி வட்டம் | : | 5 இதழ்கள் அடியில் இணைந்து, நீண்ட குழல் வடிவானது. குழல் 5 முதல் 7 செ. மீ. நீளமானது. மேலே 5 அகவிதழ்கள். மடல் 2-2.5 செ.மீ. அகன்று, விரிந்தது. மடல்கள் சமமில்லாதன. தெளிவற்ற இரு உதடுகள் போன்றன. |
மகரந்த வட்டம் | : | 4 மகரந்தத் தாள்கள். இவற்றுள் 2 நீளமானவை. அல்லிக் குழலுக்கு மேலே, சற்று வெளியேறித் தெரியும். |
மகரந்தப் பைகள் | : | ஓர் அறை கொண்டவை. |
சூலக வட்டம் | : | சூற்பை சற்றே காம்புடையது. உருளை போன்ற கூம்பு வடிவமானது. |
சூல்கள் |
: | ஒன்று முதல் பல வரிசைகளில் அமைந்திருக்கும். |