இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாவரங்கள்
573
உலக வழக்குப் பெயர் | : | முள்ளி, கழிமுள்ளி, கழுதை முள்ளி. |
தாவர இயல்பு | : | புதர் போன்று செழித்து வளரும் பெரிய செடி. பெரிதும் கடற்கரையிலும், உப்பங்கழியிலும், நிலத்திலும், நீரிலும் செழித்து அடர்ந்து வளரும் வலியதொரு செடி. முட்களை உடையது. |
இலை | : | இறகன்ன பிளவுகளை உடைய நீண்ட இலை. இலை விளிம்பு முட்களை உடையது. இலைக் காம்பிற்கு மேல் முள் உண்டாகும். |
மஞ்சரி | : | செடி நுனியில் ‘ஸ்பைக்’ என்ற பூந்துணர் உண்டாகும். மலர்கள் நேரே மலர்த் தண்டில் ஒட்டியிருக்கும். |
மலர் | : | பெரிய நீல நிறமான மலர். மலரடிச் செதில் முட்டை வடிவானது. |
புல்லி வட்டம் | : | 4 பிளவுகளை, பிரிவுகளை உடையது. வெளிப்புறத்து இரு புறவிதழ்கள் பெரியவை. |
அல்லி வட்டம் | : | அகவிதழ்கள் இணைந்தவை. அடியில் குட்டையாக, குழல் வடிவானதாக இருக்கும். மேல் உதடு அருகியிருக்கும். கீழ் உதடு 3 பிளவானது. |
மகரந்த வட்டம் | : | 4 தாதுக்கால்கள். இரு தாதுக்கால்கள் நீளமானவை. தடித்தவை. தாதுப்பை ஒரு செல் உள்ளது. |
சூலக வட்டம் | : | 2 செல் உள்ள சூலகம். ஒவ்வொரு செல்லிலும் 2 சூல்கள் உண்டாகும். சூல்தண்டு மெல்லியது. சூல்முடி இரு பிளவானது. |
கனி | : | ‘காப்சூல்’ என்ற வெடி கனி. நீண்டு தட்டையானது. பளப்பளப்பானது. |
விதை | : | 4 விதைகள் உண்டாகும். வட்ட வடிவானவை. விதையுறை மிக மெல்லியது. |
இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 44, 48 என நாராயணன் (1951 ஏ, பி.) கணித்துள்ளார்.