இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
732
மஞ்சரி | : | 10 அங்குல நீளமும், 0.5-1.5 அங்குல, அகலமுமான பூந்துணர். மங்கிய வெண்ணிறம். |
மலர் | : | பெருமூங்கிலைப் பெரிதும் ஒத்தது. |
விதை | : | பெருமூங்கிலரிசியைப் போல, இதிலும் மூங்கிலரிசி உண்டாகும்; இதனை மலைவாழ் மக்கள் உணவாகக் கொள்வர் . |
இதன் கோல்கள், கம்புகளாகவும், கூரை வீடு கட்டுதற்கும், தடியடிப் பணிக்குக் காவலர்களுக்குக் கொடுக்கப்படும் ‘லத்தி’ என்ற கைக் கம்புகளாகவும் பயன்படும்.
இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 70 என பார்த்தசாரதி (1946a) என்பாரும், 2n = 72 என, டிஷ்லர் (1927) ரிக்காரியா, கோட்வால்(1940b) என்போரும் கணக்கிட்டுள்ளனர்