இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாவரங்கள்
79
ஓரிலானா என்று கண்டு கொள்ள முடிகிறது. இதன் ஆங்கிலப் பெயர் அர்நோட்டோ, (Ar-notto) என்பதாகும். இதன் தாவரப் பெயரை இங்ஙனம் கண்டு கொள்ளுதற்குக் ‘காம்பிள்’ (பக். 36), ‘லஷிங்டன்’ (ஆங்கிலப் பெயர் வரிசை) ஆகிய இருவருடைய நூல்கள் துணை செய்தன.
பிக்சா ஓரிலானாவின், குரோமோசோம் எண்ணிக்கை 2n=14 என, சானகி அம்மாளும் (டி 1945), கிராஸ் (1965) என்பவரும் 2n = 16 என, சிம்மண்ட்ஸ் (1954) என்பவரும் கண்டுள்ளனர்.
நறவம் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | தாலமிபுளோரே, அகவிதழ் பிரிந்தவை |
தாவரக் குடும்பம் | : | பிக்சேசி (Віxaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | பிக்சா (Bixa) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | ஓரிலானா (orellana) |
ஆங்கிலப் பெயர் | : | தி அர்னோட்டா (The Arnotto) |
தாவர இயல்பு | : | புதர்ச் செடி; கிளைகள் நீண்டு வளர்ந்து கொடி போல் இருக்கும்; என்றும் தழைத்திருக்கும் தாவரம். |
இலை | : | தனியிலை, அகன்றது. நீள் இதய வடிவானது. நுனி கூரியது. இலைச் செதில்கள் நுண்ணியவை. |
மஞ்சரி | : | கிளை நுனியில் கலப்பு மஞ்சரியாக இருக்கும். |
மலர் | : | பெரியது; சிவப்பு நிறமுடையது. |
புல்லி வட்டம் | : | 5 புறவிதழ்கள் விளிம்பு ஒட்டியவை; விரைந்து உதிர்வன. |
அல்லி வட்டம் | : | 5 அகவிதழ்கள் அரும்பில் திருகு அமைப்பில் அமைந்துள்ளன. |