பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98


படை அறிவுக்குத் தேவையான புத்தகங்களையாவது, வீடுகளில் சேகரித்துப் பயன்படுத்தும் முறை இருக்கவேண்டும்.

பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள மட்டுமல்ல ஏற்கனவே நமது மக்களுக்குத் தெரிந்திருக்கிற பல விஷயங்களை மறந்துபோகச் செய்வதற்குப் பல புத்தகங்கள் தேவை நமது மக்களுக்குக் கைலாய காட்சிகள். வைகுந்த மகாத்மியம், வரலட்சுமி நோண்பின் மகிமை, நாரதரின் தம்பூரு. நந்தியின் மிருதங்கம் சித்ராபுத்திரரின் குறிப்பேடு நரகலோகம் அட்டைக்குழி அரணைக்குழிகள் மோட்சத்தின் மோகனம், இந்திர சபையின் அலங்காரம், அங்குப்பாடி ஆடும் மேனகையின் அழகு இவையெல்லாம் தெரியும். ஆறுமுகம் தெரியும்; அவர் ஏறும் மயில் தெரியும்; அம்மை வள்ளிக்கும், அழகி தெய்வயானைக்கும் ஏசல் நடந்தது தெரியும். இவையும் இவை போன்றவையும் ஏராளமாகத் தெரியும்.

நந்தி துர்க்கமலை எங்கே? தெரியாது என்பர். நிதி மந்திரியின் பெயர் என்ன? அறியோம் என்பார்கள். காவிரியின் பிறப்பிடம்? கவலை கொள்ளார். பாலாற்றில் நீர் ஏனில்லை? சொல்லத் தெரியாது. நூல் ஆலைகள் எவ்வளவு உள்ளன; கணக்கு அறிவார். தாராபுரம் எந்தத் திசையில் இருக்கிறது? தெரியாது. தாமிரபரணி எத்தனை மைல் நீளம் ஓடுகிறது? திகைப்பர் பதிலறியாமல். அவர்கள் வாழும் மாவட்டத்தின் அளவு என்ன? தெரியாது என்பர். மாகானத்தின் வருமானம் என்ன? அறியார்கள்--அறிந்து கொள்ளவும் முயலமாட்டார்கள். அனுமத் பிர பாவம் தெரியும்; அரச மரத்தைச் சுற்றினால் என்ன பயன் கிடைக்கும் என்பதைக் கூறத் தெரியும். பேய் பில்லி சூனியம் பற்றிய கதைகளைக் கூறத் தெரியும் அவர்கள் ஏறிச் செல்லும் ரயிலைக் கண்டு பிடித்தவர் யார் என்பது தெரி-