பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

செந்தமிழ் பெட்டகம்

தும் வேதம் முழுங்குகின்றது யாழ்கள் இசைக்கின்றன, சூதர் முதலியோர் அரசனை வாழ்த்தி நாழிகை கூறுகின்றனர் *

பிற நாட்டிலிருந்து கொண்டுவந்த செல்வங்கள் தெய்வலோகம்போல் மதுரையில் கிடக்கின்றன அரசன் இரவில் பெண்களோடு கூடியிருந்து, காலையில் பள்ளியெழுச்சி பாடியதும் எழுந்து ஒப்பனை செய்து கொண்டு, முருகன்போல் தோன்றிப் போரில் உயிரிக்கஞ்சாது போர்செய்த வீரர்களை யெல்லால் காண வரும்படி அழைத்தும், பாணரையும் விறலியரை யும் புலவரையும் வருகவென வரவேற்றும், அனைவரையும் ஒருங்கு வைத்து விருந்துாட்டிப் பரிசில் வழங்கு கிறான் இவற்றை எல்லாம் கூறுமுகத்தான் மதுரையையும் அவனையும் பாடுகின்றார் “ நீ குடிகளையெல்லாம் வாழ்வித்து உயர்ந்த ஞானத்தை எய்திச் சுற்றத்தாருட னும் தலைவர்களோடும் இன்பமாய்ப் பலநாள் வாழ்வாயாக” என்று வாழ்த்தி முடிக்கின்றார் புலவர்

நிலையாமையைக் கூறினாலும் உலக வாழ்வினைப் புலவர் இகழ்ந்து ஒதுக்கவில்லை; நிலையாத உலகத்தில் நிலைத்த புகழை நிலைநாட்ட வேண்டும் என்கிறார் தன்னலமே கருதிவாழாது, சுற்றுமும் தலைவரும் கலைஞரும் குடிகளும் சிறக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பிறர்க்கென வாழ்தலே சிறப்பு எனக் கருத வைக்கின்றார் புலவர் மிகச் சிறந்த அறிவையும் பெறுவதே பெருமை, சிற்றின்பத்தையோ, சிறிய நன்மையையோ கருதி அறத்தையும் மானத்தையும் கைவிடுதல் ஆகாதென்று, இவ்வாறு நிலையாமையை வற்புறுத்த வந்தவர் வாழ்வின் உயர்ந்த குறிக்கோள் களைச் சுட்டி வாழுமாறு தம்முடைய தலைவனை வாழ்த்துகின்றார் அந்நாளைய அரசர் வாழ்வையும், நகர நிலைமையையும் படம்பிடித்து இந்தப் புலவர் காட்டி, இத்தனை செல்வத் தோடும், உயர்ந்த குறிக்கோளோடும் சனகனைப் போல வாழ்வதனை வற்புறுத்துவது ஒரு புதுமையே ஆகும்