பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திம்மனைக் கட்டி இழுத்துக்கொண்டே சென்று சுப்பம்மா வைக் காட்டச் சொல்லுங்கள், நீங்களும் தேடுங்கள் என்று மன்னன் சொல்ல அவ்வாறே கூட்டிச் செல்கிறார்கள் சில சிப்பாய்கள். செங்கானும் சுப்பம்மாவும் சிப்பாய்களைக் கொன்று திம்மனை மீட்கிறார்கள். சுப்பம்மா நடந்தவற்றைக் கூறி, நான் சாகின்றேன் நீர் நலமே வீடு செல்வீர் என்கிறாள். திம்மன் போகவில்லை. மற்றொரு புறமிருந்த ஓர் ஆலின்மேல் இருவரும் உட்கார்ந்தபடி சாவுக்கு வரவேற்பும் வாழ்த்தும் கூறிப் பாடி இருக்கின்றார்கள். செங்கான் எதிரிகள் வருகிறாரா என வேவு பார்க்கின்றான். சில சிப்பாய்கள் வந்து அதே மரத்தடியில் உட்கார்ந்து நாம் சுப்பம்மாவையும் திம்மனையும் சுறுசுறுப்புடன் தேடுகிறோமா என்று மேற்பார்வை பார்க்கத் தேசிங்கு வரக்கூடும்" என்று பேசிக்கொள்கிறார்கள். அதுபோலவே ஒரு கூட்டம் வருகின்றது. சுப்பம்மாவும் செங்கானும் திம்மனும் அக்கூட்டத்தில் பாய்கிறார்கள். கூட்டத்தின் தலைவன் சாகிறான். மற்றும் பலர் சாகிறார்கள். ஆனால் திம்மனும் சாகிறான். சுப்பம்மா பிடிபடுகிறாள். சுப்பம்மா தேசிங்கின் அவை நடுவில் கட்டோடு நிறுத்தப் படுகிறாள். சுவையான சொற்போருக்குப்பின் தேசிங்கு தீர்ப்பைச் சொல்லுகிறான்: எல்லாரும் பார்க்க இவளை நிறுத்தி ஒரு கையை வெட்ட வேண்டும். மறுநாள் ஒரு கை! மறுநாள் ஒரு மார்பு! மூன்றாநாள் முதுகினில் சதையைக் கழிக்க! பின்னர் மூக்கறுக்க. பின்னர் காதுகள்! இடையிடையே கொதி நீரை மேலே ஊற்றுக. குதிகாலைக் கொளுத்துங்கள்!

9

9