பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 அவன் பொய்யுரை பஃறொடை வெண் பா என்மீதில் ஆசை அவட் கில்லா மலும் இல்லை; என்மீதில் ஆசையே இல்லா தவள் போலே ஏன்நடந்தாள் என்றுகேள். என்னை இன்னா னென்று தான்அறிவ தற்குள் தன்னைக் காட்டிக் கொள்வாளா! மட்டுப் படுத்தினாள் நெஞ்சை! வளர்காதல் கட்டுப் படுத்தினேன் நானும் கடைசிவரை! அன்னவளின் நெஞ்சத்தின் ஆழத்தை என்சொல்வேன்? என்மீதில் ஆசையே இல்லா தவள் போலும் வீட்டுக் காரன்மேல் விருப்ப முடையாள்போலும் காட்ட, நடந்துபோய்க் கண்ணால் வழிபார்த்து நெஞ்சத்தை மட்டும்என் நேயத்தில் வைத்தாளே வஞ்சி திறமை வரைதல் எளிதா? குறுநகைப்பும் கொஞ்சும் கடைநோக்கும் கூட்டி உறுதி குறித்தாள் உனக்குத் தெரியாமல்! மேலும் இதுகேட்பாய் வீட்டில் நடந்தவற்றை: ஓலைத் தடுக்கில்நான் திண்ணையில்உட் கார்ந்திருந்தேன்; உள்ளிருந்து பார்ப்பாள் ஒளிந்துகொள்வாள்; என்முகந்தான் கள்ளிருந்த பூவோ! களிவண்டோ மாதுவிழி! தன்கணவன் எப்போது சாவானோ, இச்சுதரி சன் கணவன் ஆவதென்றோ' என்ப தவள்கவலை. இன்னும் விடியா திருக்குதடா ரஞ்சித்சிங்க்! பொன்னங் கதிர்கிழக்கிற் பூக்கா திருக்குதடா!

21

21