பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சுப்பம்மா தொல்லை கலி வெண்பா அப்போதுதான் திம்மன் கண்விழித்தான்! 'ஆ'என்றான்; எப்போது வந்தீர்கள் என்றெழுந்தான்-'இப்போது தான்வந்தேன்' என்றான் சுதரிசன்! தங்கட்கு மீன்வாங்க நான்போக வேண்டுமே-ஆனதினால் இங்கே இருங்கள் இதோவருகின் றேனென்று தங்காது திம்மன் தனிச்சென்றான் - அங்கந்தச் சுப்பம்மா தன்னந் தனியாகத் தோட்ட்த்தில் செப்புக் குடம்துலக்கிச் செங்கையால்-இப்புறத்தில் வைக்கத் திரும்பினாள்; வந்த சுதரிசன்சிங்க் பக்கத்தில் நின்றிருந்தான் பார்த்துவிட்டாள்-திக்கென்று தீப்பற்றும் நெஞ்சோடு 'சேதிஎன்ன' என்றுரைத்தாள். தோப்புக்குப் போகின்றேன் சொல்லவந்தேன்-சாப்பிட்டுச் செஞ்சிக்குப் போவதென்ற தீர்ப்போடு வந்தேன்.நீர் அஞ்சிப்பின் வாங்காதீர்; அவ்விடத்தில்-கெஞ்சி அரசரிடம் கேட்டேன் அதற்கென்ன என்றார் அரசாங்கத் துச்சிப்பாய் ஆக்கி-இருக்கின்றேன் திம்மனுக்கு நான்செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன். ஐம்பது வராகன் அரசாங்கச்-சம்பளத்தை வாங்கலாம் நீங்கள் வயிறாரச் சாப்பிடலாம் தீங்கின்றி எவ்வளவோ சேர்க்கலாம்- நாங்களெல்லாம் அப்படித்தான் சேர்த்தோம். அதனால்தான் எம்மிடத்தில் இப்போது கையில் இருப்பாக-முப்பத்து

23

23