பக்கம்:தமிழச்சியின் கத்தி, 1992.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்பது பேருக்கு நான்-உதவிகள் இது வரைக் கும்செய்தேன் மண்ணில் இருப் பவர்கள்-நொடியினில் மாய்வது திண்ண மன்றோ! கண்ணிருக் கும் போதே- இவ்வரிய கட்டுடல் மாயு முன்னே நண்ணும் அனைவ ருக்கும்-இயன்றிடும் நன்மை செய்தல் வேண்டும். வண்டி யினை அமர்த்து-விரைவினில் மனை வியும் நீயும் உண்டி முடிந்த வுடன்-வண்டிதான் ஓடத் தொடங் கியதும். நொண்டி எரு தெனினும்-செஞ்சியினை நோக்கி நடத்து வித்தால் கண்டிடு பத்து மணி-இரவினில் கட்டாயம் செஞ்சி நகர். வீட்டையும் பேசி விட்டேன்-இருவரை வேலைக் கமைத்து விட்டேன் தமிழச்சியின் கத்தி "கோட்டையிற் சிப்பா யாய்-அமரும் கொள்கையி லேவரு வார் காட்டு மனிதர் அல்லர்"-என்றுநான் கண்டித்துப் பேசி விட்டேன் கேட்டு மகிழ்ந் தார்கள்-நிழல்போல் கிட்ட இருப் பார்கள். திம்மன் இது கேட்டான்-கிளம்பிடத் திட்டமும் போட்டு விட்டான்! 'பொம்மை வரும்' என்றதும்-குழந்தைகள் பூரித்துப் போவது போல் 'உம்'என்று தான் குதித்தான்-விரைவினில் உண்டிட வேண்டு மென்றான். அம்முடி வின்படியே-தொடங்கினர் அப்பொழு தே பயணம்!

27

27