பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

109


அனுப்பிச் சப்ளை செய்து விற்றும் வியாபாரத்தை ஒழுங்காகக் கவனித்து நடத்திவரலானேன்.

நூல் : ரா. பழனியாண்டிப் பிள்ளையின் ஜீவிய சரித்திரம் (1928) பக்.11, 12
நூலாசிரியர் : ரா. பழனியாண்டிப் பிள்ளை
Agreement – உடன்படிக்கை

டர்பனில் எட்வர்டு இஸ்னல் என்னும் ஒருபெரிய வியாபாரிக்கு ஸ்பிங்கோ என்னும் நானிருக்குமிடத்தில் 100 ஏக்கர் காடு நிலம் இருந்தது. அவர் என்னை வரவழைத்து என்னைப் புகழ்ந்து பேசி எனக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை நான் சீர்திருத்தம் செய்து வருமானத்திற்குத் தகுதியாக்கிக் கொண்டது போல் இமிகிரேஷன் ஜனங்களுக்குப் பயிரிடக் கொடுத்தும், இன்னும் என்னுடைய அபிப்பிராயப்படி செய்தும் வசூலாகும் வருமானத்தில் 100 ரூபாய்க்கு ஐந்து ருபாய் விகிதம் கமிஷன் எடுத்துக் கொண்டு மிகுதியைத் தனக்குக் கொடுக்கும்படியாக உடன்படிக்கை (அக்ரிமெண்டு) எழுதிக் கொண்டு மேற்படி தன்னுடைய 1000 ஏக்கர் காடு நிலங்களை என்னிடம் ஒப்புவித்தார்.

நூல் : ரா. பழனியாண்டிப் பிள்ளையின் ஜீவிய சரித்திரம் (1928) பக்கம் - 16
நூலாசிரியர் : ரா. பழனியாண்டிப் பிள்ளை
Stock - இருப்பு

சில தினங்களுக்கெல்லாம் ஆஸ்திரேலியாவிலிருந்து சில வியாபாரிகள் வந்து அவ்விடங்களிலிருந்த சோளங்களை மூட்டை நான்கு சிலிங் முதல் பத்து சிலிங் வரை விலை ஏற்றிக் கொடுத்து வாங்கி விட்டார்கள். பிறகு சில தினங்களுக்கெல்லாம் மூட்டை இருபது சிலிங் வரை ஏற்றமாகி அந்தச் சமயமும் ஆஸ்திரேலியா வியாபாரிகள் வந்து அவ்விடங்களிலிருந்த சோளம் முழுவதும் வாங்கி விட்டார்கள். நான் மாத்திரம் விற்கவில்லை. பிறகு சில தினங்களுக்கெல்லாம் சோளம் விலையேறி மூட்டை முப்பது சிலிங் விலையாக, என் இருப்பிலிருந்து (ஸ்டாக்கு) 1000 மூட்டைகளை விற்றேன்.

மேற்படி நூல் : பக்கம் - 19