பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

உவமைக்கவிஞர் சுரதா


லாங் பேடவுட் - நீள தேய்பிறை
டிஸால்வ் - தேய் வளர்பிறை
வைப் - துடைப்பு
கட் - வெட்டு
ஐரிஸ் இன் - உட் சுழல்
ஐரிஸ் அவுட் - வெளிச்சுழல்
ஸூபர் இம்போஸ் - அடுக்குக் காட்சி
மல்டிபிள் எக்ஸ்போஷர் - அடுக்குத் தூக்கு
டிஸ்டண்ட் ஷாட் - நெடுந் தொலைவுக் காட்சி
லாங் ஷாட் - தொலைவுக் காட்சி
பிக்ளோஸ் அப் - நுண்ணணி
க்ளோஸ் அப் - அண்மைக் காட்சி
டாப் ஷாட் - முடிநேர்க் காட்சி
ஸ்ட்ரெய்ட் ஷாப் - நேர்க் காட்சி
ட்ரக் ஷாட் - கருவிப் பாய்ப்பு
க்ரேன் ஷாட் - தூக்கிப் பாய்ப்பு
மாஸ்க் ஷாட் - மறைப்புக் காட்சி
இதழ் : குண்டுசி, நவம்பர் 1947, பக்கம் : 14, பட்டை - 1, ஊசி - 2
கட்டுரையாளர் : பாலபாரதி சது. சு. யோகியார்
அவதாரம்

அவதாரம் என்பதற்குக் கீழிறங்குதல் என்பது பொருள். உயர்நிலையிலுள்ள ஒருவர், பிறர் நலன் நாடி உலகில் தோன்றுவதைத்தான் அவதாரம் எனக் கூறுகின்றோம்.

நூல் : பெரியாழ்வார் பெண்கொடி (1947), பக்கம் : 176
நூலாசிரியர் : பண்டிதை எஸ். கிருஷ்ணவேணி அம்மையார்.