தமிழ்ப் பழமொழிகள்
195
பழைய பகையை எண்ணிப் பழ முள்ளுக் கிளையாதே.
பழைய பெருச்சாளி.
பழைய பொன்னனே பொன்னன்; பழைய கப்பறையே கப்பறை.
பழையனூர் நீலி பரிதவித்து அழுதது போல.
பள்ளத்தில் இருக்கிறவன் பள்ளத்திலே இருப்பானா? 15710
பள்ளத்தில் இருந்தால் பெண் சாதி; மேட்டில் இருந்தால் அக்காள்,
- (பெண்டாட்டி, மேட்டில் ஏறினால் தாயார்.)
பள்ளத்துாரான் போனதே போக்கு.
பள்ளத்தைக் கண்டால் பாய்ந்தோடும் தண்ணீர் போல,
பள்ளம் இருந்தால் தண்ணீர் தங்கும்.
- (பள்ளம் உள்ள இடத்தில்.)
பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டு போவான். 15715
- (போகிறான்.)
பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்.
- (பள்ளம் கண்ட.)
பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்; பயம் உள்ள இடத்திலே பழி போம்.
- (கண்ட இடத்திலே.)
பள்ளம் மேடு இல்லாமல் பருத்தி விதைக்கிறது.
- (விளைக்கிறது.)
பள்ள மடையில் பாய்ச்சிய நீர் போல.
பள்ளனுக்குப் பல் தேய்த்தால் பசிக்கும்; பார்ப்பானுக்குக் குளித்தால் பசிக்கும். 15720
பள்ளி ஒளித்திரான்; பார்ப்பான் குளித்திரான்.
பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது.
- (கணக்கன் உதவான்.)
பள்ளிக்கு ஓர் இடம் எச்சில்; பார்பானுக்குக் கண்ட இடம் எல்லாம் எச்சில்,
பள்ளிக் குப்பத்து அப்பட்ட வாத்தியார்.
- (பள்ளிக்குப்பத்துக்கு அம்பட்டன் வாத்தியார்.)
பள்ளிக்குப் பத்து மனை. 15725
பள்ளிக்குப் பல்லு. பார்ப்பானுக்கு முழுக்கு.
பள்ளிக்கும் இரும்புக்கும் பதம் பார்த்து அடி.
பள்ளிக்கும் நாய்க்கும் பதம் பார்த்து அடிக்க வேண்டும்.
பள்ளிக்கு வைக்காமல் கொள்ளிக்கு வைத்தான்.
- (குறைத்து வைத்தார்.)
பள்ளிக்கூடத்துக்குப் போனால் வாத்தியார் அடிப்பார். 15730