பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—13—

ஏரிக்கரையினில் வாழ்ந் திருந்து பிறரைக்காக்கும்
சேரியர் தாழ்ந்தார்களோ? - சகியே சேரியர் தாழ்ந் 77

ஊருக் கிழிந்தோர் காவல்; உயர்ந்தோர் இவர்கள் வாழ்வின்
வேருக்கு வெந்நீரடி - சகியே வேருக்கு வெந்நீரடி 78

அங்கக் குறைச்சலுண்டோ ஆதித்திராவிடர்க்கே
எங்கேனும் மாற்றமுண்டோ? - சகியே எங்கே 79

புங்கவர் நாங்கள்என்பார் பூசுரர்என்பார் நாட்டில்
தங்கட்கே எல்லாம் என்பார் - சகியே தங்கட்கே 80

ஆதிசைவர்கள் என்பார்; "ஆதிக்குப் பின்யார்" என்றால்
காதினில் வாங்காரடி - சகியே காதினில் வாங்காரடி 81

சாதியில் கங்கைபுத்ரர் என்பார்கள் சாட்சி, பத்ரம்
நீதியில் காட்டாரடி - சகியே நீதியில் காட்டாரடி 82

வேலன்பங் காளியென்பார் வெறுஞ்சேவ கனைக்கண்டால்
காலன்தான் என்றஞ்சுவார் -- சகியே காலன்தான் என்ற 83

மேலும் முதலி, செட்டி, வேளாளப் பிள்ளை முதல்
நாலாயிரம் சாதியாம் - சகியே நாலாயிரம் சாதி 84

எஞ்சாதிக் கிவர்சாதி இழிவென்று சண்டையிட்டுப்
பஞ்சாகிப் போனாரடி - சகியே பஞ்சாகிப் போனா 85

நெஞ்சில் உயர்வாய்த்தன்னை நினைப்பான் ஒருவேளாளன்
கொஞ்சமும் எண்ணாததால் - சகியே கொஞ்சமும் 86