பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—32—

வஞ்சகர்க்கென்ன வழுத்தினர் சேசீ நல் தோழி - இன்ப
வாழ்க்கையடைந்திட யார்க்கும் சுதந்தரம் என்றார்.

நாலு சுவர்க்கு நடுப்புறம் ஏதுண்டு? தோழி - அங்கு
நல்ல மரத்தினிற் பொம்மை அமைத்தனர் தோழா - அந்த
ஆலயம் சாமி அமைத்தவர் யாரடி? தோழி - மக்கள்
அறிவை இருட்டாக்கி ஆள நினைப்பவர் தோழா - மக்கள்
மாலைத் தவிர்த்து வழி செய்வரோ இனித் தோழி - செக்கு
மாடுகளாக்கித்தம் காலைச்சுற்றச் செய்வர் தோழா - அந்தக்
கோலநற் சேசு குறித்ததுதா னென்ன? தோழி - ஆகா
கோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா.

***


ஆண்மைகொள் சேசு புவிக்குப் புரிந்ததென்? தோழி - அவர்
அன்பெனும் நன்முர செங்கும் முழக்கினர் தோழா-அந்தக்
கேண்மைகொள் சேசுவின்கீர்த்தி யுரைத்திடு தோழி - அவர்
கீர்த்தியுரைத்திட வார்த்தை கிடைக்கிலை தோழா - நலம்
தாண்டவம் ஆடிடச் செய்தவரோ அவர்? தோழி - அன்று
தன்னைப் புவிக்குத் தரும் பெருமானவர் தோழா - அந்த
ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத்தக்கவர் யாவர் - எனில்
'அன்னியர்' 'தான், என்ற பேதமிலாதவர் தோழா.