பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதுவுமின்றி, வெளியீட்டுப் சிறப்புரையாக,

தோழர் க. இராமகிருஷ்ணன்
தோழர் காசி, ஈ. லக்ஷ்மணப்பிரசாத்

தோழர் அ. ஜெகந்நாத நாயடு


ஆகியோர் எழுதி, அவ்வெளியீட்டை பெருமக்கட்கு நல்லணம் அறிமுகப் படுத்தியதும் மறக்க முடியாததாகும்.

இவ்வாறு அந்தாள் வெளிவந்த தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு, எல்லாராலும் படிக்கப் பட்டது ; அதன் கருத்துக்கள் பரவின.

தாழ்த்தப்பட்ட மக்கள் மக்களோடு நிகரானவர்கள் என்பதும் மக்களில் உயர்வு தாழ்வு இல்ல என்பதும் இந்நாளில் யாவராலும் ஒப்புக்கொள்ளப் படுகின்றன என்று பேசப்படுகிறது.

ஆயினும், உயர்வு தாழ்வு நீங்கிவிடவில்லை என்பது மறுக்கக் கூடியதன்று.

அதனால், என் தோழர் பலர் இதை மீண்டும் அச்சிட்டு வெளியிடவேண்டும் என்றார்கள் வெளியிட்டேன்.

முதலில் வெளியிட்டவர்க்கும் சிறப்புரை தந்தார்க்கும் நன்றி!

பாரதிதாசன்

புதுவை. 28 - 8 - 1950