பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—8—

வான்மறை எனத்தங்கள் வழக்கம் குறித்த நூலைத்
தேன்மழை என்றாரடி - சகியே தேன்மழை என்று 27

"ஏன்மறை?" எங்கட்கென்றே இசைத்தால் ஆரியர், நீங்கள்
வான்புகத் தான்என்றனர் - சகியே வான்புகத் தானென்றனர் 28

மேலேழு லோகம்என்றார் கீழேழ லோகம்என்றார்
நூலெல்லாம் பொய்கூறினார் - சகியே நூலெல்லாம் 29

மேலும் தமை நிந்திப்போர் மிகுகஷ்டம் அடைவார்கள்
தோலோதோல் கூடா தென்றார் - சகியே தோலோதோல் 30

சுவர்க்கத்தில் தேவர்என்போர் சுகமாய் இருப்ப துண்டாம்
அவர்க்குத்தாம் சொத்தம் என்றார் - சகியே அவர்க்குத்தா 31

துவக்கத்தில் ஆரியரைத் தொழுதால் இறந்தபின்பு
சுவர்க்கம்செல் வார்என்றனர் - சகியே துவக்கத்தில் 32

தம்சிறு வேதம்ஒப்பாத் தமிழரை ஆரியர்கள்
நஞ்சென்று கொண்டாரடி - சகியே நஞ்சென் 33

வெஞ்சிறு வேதம்ஒப்பா வீரரை ஆரியர்கள்
வஞ்சித்துக் கொள்குரடி - சகியே வஞ்சித் 34

அழிவேதம் ஒப்பாதாரை அரக்கரென் றேசொல்லிப்
பழிபோட்டுத் தலைவாங்கினார் -- சகியே பழிபோட்டுத் 35

பழிவேதம் ஒப்போம்என்ற பண்டைத் தமிழர்தம்மைக்
கழுவேற்றிக் கொன்றாரடி --சகியே கழுவேற்றிக் கொன் 36