பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்வழிச் சேறல்

243



91. பெண்வழிச் சேறல்


1.மனைவிழைவார் மாண்பயன் எய்தார்; வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.

இன்பம் காரணமாக மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடக்க விரும்புபவர் சிறந்த அறப் பயனை அடைய மாட்டார். யாதானும் ஒரு செயலைச் செய்து முடிக்க விரும்புபவர் வேண்டாத பொருளும் மனைவியை விரும்பி அவள் வழி ஒழுதுதலேயாம்.

மனை-மனைவி; விழைதல்-விரும்புதல்; வினைவிழைதல்- ஒரு வேலையைச் செய்து முடிக்க விரும்புதல். 901

2.பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாத நாணுத் தரும்.

அறத்தினையும் பொருளினையும் பேணாது மனையாளை மட்டும் விரும்புபவன் செல்வம் பெரியதோர் நாணம் உலகத்தே நிற்கும்படியாக அவனுக்கு நாணினைத் அரும்.

பேணாது-விரும்பாது, பாதுகாவாது; பெண் விழைதல்-மனையாளை விரும்புதல்; பெரியதோர் நாண்-உலகோரெல்லாம் கண்டு நாணும்படியான வெட்கம். 902

3.இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

ஒருவன் தன் மனைவியிடத்தில் எந்தக் காலத்திலும் தாழ்ந்து நடக்கும் தகுதியற்ற தன்மை, நல்லாரிடம் செல்லும் போது அவனுக்கு எப்போதும் நாணத்தைக் கொடுக்கும்.

தாழ்ந்த இயல்பின்மை-தாழ்ந்து நடக்கும் தகுதியற்ற தன்மை; எஞ்ஞான்றும்-எக்காலத்தும்; (இதை இரண்டு: இடத்தும் கூட்டிப் பொருள் செய்க.) 903

4.மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.

மனைவிக்கு அஞ்சி நடந்து மறுமைப் பயனை அடைய முயலாத ஒருவன் செயலாற்றும் திறமையில் புகழடைதல் இல்லை.