பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



ஐம்பெரும் பூதங்களாக ஆனவன்; உயிர்கள் தோன்ற, தான் காரணமாக இருந்தும் தனக்கென ஒரு தோற்றம் இல்லாதவன்; எல்லா உயிர்கட்கும் ஈறாய் இருந்தும் தனக்கோர் ஈறில்லாதவன். ஐம்புலன்கள் தாமே விரும்பிக் சென்று அவனைப் புணர முடியாது என்க. ஆனால் கருணை காரணமாகப் பொறி, புலன்கள்மாட்டு இரக்கம் காட்டினால் - அதாவது அவற்றோடு புணர்ந்து நின்றால் அவை பதிகாரணங்களாக மாறும் வாய்ப்பு உண்டு.

ஆனந்தத்து அழுந்தல்

75.

புணர்ப்பது ஒக்க எந்தை என்னை

ஆண்டு பூண நோக்கினாய்

புணர்ப்பது அன்று இது என்ற போது

நின்னொடு என்னொடு என்இது ஆம்

புணர்ப்பது ஆக அன்று இது ஆக

அன்பு நின் கழல்கணே -

புணர்ப்பது ஆக அம் கணாள

புங்கம் ஆன போகமே

71


புணர்ப்பது-சேர்த்துக்கொள்வது. புங்கம்-உயர்வு.

‘ஐயனே! என்னை ஆண்டுகொண்டு என்னை உன்னிடம் முழுவதுமாகப் புணர்த்தினாய். அன்றியும் உன் அருள் பூரணமாகக் கிடைக்கும்படி உன் திருக்கண்களால் நேர்க்கினாய்.

‘உன் அருள் என்னையும் நின்னையும் புணர்த்த வில்லை, நான் இங்கேயும் நீ அங்கேயும் ஆக ஆகிவிட்டோம் நின் அருள் உன்னை அடைவதற்குரிய உபாயம் என்றிருந்தேன். ஆனால் அந்த அருள்வழிச் சென்று புணர்ப்பு ஏற்படவில்லை. ஆதலால், அந்த அருளாகிய உபாயம் உனக்கும் எனக்கும் என்ன பயனைச் செய்தது?