பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 261


மூலமாக இருப்பது அந்தத் திருவடி என்கிறார். இது படைத்தல் தொழிலைக் கூறியவாறாயிற்று.

‘பூங்கழல்கள் எல்லா உயிர்க்கும்’ போகமாம் என்றதால் அத்திருவடி தனு, கரண, புவன, போகம் என்பவையாய் அமைந்து உயிர்கள் வாழ்வதற்குக் காரணமாய் உள்ளது என்பதை வலியுறுத்தினார். இதனால் ‘காத்தல்' தொழிலைக் கூறினாராயிற்று.

'இணை அடிகள் எல்லா உயிர்க்கும் ஈறாம்’ என்றதால் எல்லா உயிர்களும் அழிவதற்குக் காரணமான முடிவாக உள்ளவையும் அத்திருவடிகளே என்ற கருத்தைப் பேசினார். இதனால் 'அழித்தல்’ தொழிலைக் கூறினாராயிற்று.

‘நான்முகனும் காணாத புண்டரிகம்' என்றதால் பிரமனுக்கும் தன்னை மறைத்துக்கொள்ளும் திருவடி என்கிறார். நான்முகன் என்ற சொல் ஒரு கருத்தோடு அமைக்கப்பெற்றுள்ளது. ஒரு முகம் உடையார் முன்புறம் காண வல்லரே அன்றி ஏனைய மூன்று திசைகளையும் காணாராயினர். இவன் நான்முகனாக இருந்தும், ஒரு நேரத்தில் எல்லாத் திசைகளையும் காண வல்லவனாயிருந்தும், தாமரை மலர்போன்ற இத்திருவடிகளைக் காணவில்லை என்றால், அவை தம்மை மறைத்துக் கொண்டன என்ற பொருளைத் தந்து நின்றது. இதனால் ஐந்தொழிலில் ‘மறைத்தல்’ தொழிலை குறிப்பிட்டாராயிற்று.

எஞ்சியுள்ளது ‘யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்’ என்பதாகும். நான்முகனுக்குத் தம்மை மறைத்துக்கொண்ட அத்திருவடிகள் எம்போன்றவரும்