பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 341


பயனாகக் சுற்றித் திரிகின்ற சிந்தனை அவர்மாட்டுச் செல்லத் தொடங்கிற்று. கண்டதையெல்லாம் பார்க்கின்ற கண்கள் அவர் திருவடிகளையே பார்க்கத் தொடங்கிற்று. பேசும் சொற்களும் பிரார்த்தனையும் அத் திருவடிக்கே என முடிந்தது.

இதனை அடுத்துள்ள பாடலில் சராசரி மனிதர்களுக்குரிய குறைபாடுகளோடு இருந்த தாம், ஐந்தெழுத்தாகிய புணையைப் பற்றிக் கரையேறிய சிறப்பைக் கூறுகிறார்.

இரண்டாவது பத்தின் இறுதிப் பாடலில் தம் நெஞ்சை அறிவுறுத்தத் தொடங்கிய அடிகளார், இந்தப் பத்தின் இறுதி மூன்று பாடல்களில் தம் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் வேறு யாருக்கும் கிட்டாத ஒன்றாகும் என்பதை விரிவாக எடுத்துக்கூறி உலகத்தாருக்கு அறிவுறுத்துகின்றார்.

பல நூற்றாண்டுகளின் முன்னரே தேவார, திருவாசகங்கள் மக்களிடையே பெரிதும் பரவி அவர்களை ஆட்கொண்டிருந்தன. 9 ஆம் நூற்றாண்டு முதலே தேவார, திருவாசகப் பாடல்கள் திருக்கோயில்களில் ஓதப்பெற்று வந்தன என்ற உண்மையை வைரமேகப் பல்லவ மன்னனின் திருத்தவத்துறைக் கல்வெட்டிலிருந்தும், பின்னர் வந்த சோழர்கள் கல்வெட்டிலிருந்தும் அறியமுடிகிறது. 13, 14-ஆம் நூற்றாண்டுவரை பக்தி அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இன்றித் திருமுறைகள் கோவில்களிலும், வீடுகளிலும் ஒதப்பெற்றுவந்தன.

14ஆம் நூற்றாண்டுவாக்கில், சைவ சித்தாந்த சாத்திரங்கள் தோன்றலாயின. அறிவின் துணைகொண்டு பேசப்பெறும் சாத்திரங்கள் ஒருவகை, உணர்வின் துணைமட்டுமே கொண்டு ஒதப்பெற்ற திருமுறைகள் ஒருவகை. 15ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 16ஆம்