பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 365


பெற்றுவிட்டார். பின்வரும் சந்ததியினராகிய நமக்கு அதனால் என்ன பயன் ? நமக்குப் பயன் விளைய வேண்டுமானால் திருவாசகப் பாடல்கள் தோன்ற வேண்டும். அந்தப் பாடல்கள் தோன்றவேண்டுமானால் மூழ்கிய இறையனுபவத்திலிருந்து அடிகளார் வெளிப்பட வேண்டும்; வெளிப்பட்ட பிறகு அந்த அனுபவத்தை நினைந்து நினைந்து, உருகி உருகிப் பாட வேண்டும்.

இறையனுபவத்தில் இருந்துகொண்டே அது போய்விட்டதாகக் கற்பனை செய்துகொண்டு பாடமுடியுமேனும், அவ்வாறு பாடியிருப்பின் அது திருவாசகமாக இராது; வெறுவாசகமாகத்தான் இருக்கும். அதனாலேயே இறைவன் அடிகளாருக்குக் கொடுத்த அனுபவத்தை உண்மையிலேயே திரும்ப வாங்கிக்கொண்டான்.

அனுபவம் தம்மை விட்டுப் போய்விட்டது என்ற உணர்வில் பாடியதுதான் நீத்தல் விண்ணப்பம். நீத்தல் விண்ணப்பம் பாடிக்கொண்டுவரும்போதே அந்த அனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டும்வர, முழுவதுமாக அது சித்திக்கவில்லை என்ற மனத்தாங்கலில்தான் 152, 153ஆம் பாடல்கள் தோன்றுகின்றன.

மனத்தாங்கல் காரணமாக இரண்டு பாடல்களில் ஏசிவிட்டாலும் தாம் ஏசினது பிழை என்று கருதுகிறார் அடிகளார். ஏன்? வழியோடு போன தம்மை இழுத்துப் பிடித்து அருள் செய்து, அனுபவத்தைத் தந்தான். அப்படித் தந்தது அவன் கருணை காரணமாகவே தவிரத் தம் தகுதி காரணமாக அன்று என்பதை அடிகளார் உணர்ந்துள்ளார். கருணை காரணமாகத் தந்த ஒன்றைத் தாம் வைத்துக் காப்பாற்ற முடியாமையால்தான் தம்மைக் கைவிட்டு விடாதே என்று கெஞ்சினார். அந்தக் கெஞ்சல் பயனளிக்காதபோது இரண்டு பாடல்களில் ஏசினார். ஏசுகின்ற பாடல்கள் வெளிவருகின்ற அதே நேரத்தில் அடிகளாரின்