பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தென்னை மரத் தீவினிலே.

இருவரும் அழகிய படிக்கட்டுகளில் இறங்கி குளத்தின் அழகையும், தாமரைப் பூவையும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ராதா தன் கைக்கெட்டிய தாமரைப் பூ ஒன்றைப் பறித்து வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். தங்கமணியும் தனக்கு ஒரு பூ பறிக்கப் போன போது இடறி குளத்தில் விழுந்து விட்டாள். இதைக் கண்டு பயந்து போன ராதா படிக்கட்டுகளின் மேல் நின்று கொண்டு “அம்மா... அம்மா...” என்று பலமாக கத்தி அழுதாள்

ராதாவின் அழுகுரலைக் கேட்ட அருணகிரி நிமிஷ நேரத்திற்குள் அங்கு ஓடிச் சென்றான். ராதா அருணகிரியிடம். தங்கமணி குளத்தில் விழுந்து விட்டதைக கூறி படிக்கட்டிற்கு இழுத்துச் சென்றாள்.

வழுக்கி குளத்திற்குள் விழுந்து விட்ட தங்கமணி, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள் இதைக்கண்ட அருணகிரி உடனே குளத்தில் குதித்து தங்கமணியை மீட்டு படியேறி மேலே வந்தான்.

இதற்குள், குளக்கரையிலிருந்து கத்தின ராதாவின் கூக்குரலைக் கேட்டு, லட்சுமி அம்மாள். கல்யாணி, காந்திமதி, பாபு, கனகசபை எல்லாரும் பதறியபடி ஓடி வந்தார்கள்.

தங்கமணியை தோளில் சுமந்தபடி வெளியே வந்த அருணகிரி அவளை தரையில் படுக்க வைத்து