பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாத்துரை

15



வேட்டி கட்டிக்கொண்டு மெருகு கலையாத காரில் செல்லுகிறான். காரைப் பார்த்து நடந்து செல்லுகிறவன் என்ன நினைப்பான்? நாம்தான் தினம் விதண்டாவாதக்காரர்கள். வேத வேதாந்திகள், உத்தமோத்தமர்கள் என்ன எண்ணுவார்கள்? "நாம் நடந்து செல்லுகிறோம்; அவன் பறந்து செல்லுகிறான். நான் ஒதுங்கி நிற்கிறேன்; அவன் என்னை உராய்ந்துகொண்டு காரில் செல்லுகிறான். அவனும் மனிதன்; நானும் மனிதன். அனைவரும் ஆண்டவனின் புதல்வர்கள். அவன் பிறந்த வேளை காரில் செல்லுகிறான்--நான் பிறந்த வேளை நடந்து செல்லுகிறேன்" என்று எண்ணுவார்களா! எப்படி எண்ணுவார்கள்? ஏன் எண்ணவேண்டும்? நடந்து செல்லுகிறவன் எண்ணமாட்டானா "ஏ,ஆண்டவனே! இருவரும் உனது புதல்வர்கள் தான்; இருந்தும் வெயிலின் வேகத்தைத் தோற்கடிக்க அவனுக்குக் கார்; சிரமப் படாமல் செல்வதற்குச் செல்வம்; நான் நடந்து செல்லுகிறேன்; எனக்குக் காலுக்குச் செருப்புக்கூட வாங்கமுடியாதபடி தரித்திரம். இது ஏன்?” இது மாத்திரம் எண்ணியிருக்க மாட்டான்; மேலும் தொடர்ந்து எண்ணியிருப்பான்.

ரோட்டில் நடந்து செல்லுகிறவன் காரில் செல்லுகிறவனை முதலில் பார்த்ததும் ஏக்கப்பட்டிருப்பான்; அருகில் வந்ததும் அசூயைப்பட்டிருப்பான். இவன் ஒதுங்கி ஓடும்படி அவன் மோதுவதுபோல் காரில் வந்தபோது கோபப்பட்டிருப்பான். கோபம், அவனைப்போல் நாமும் ஒரு காரில் செல்லவேண்டும், முடியுமானால் அவனுடையதை