பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LC சி.என். அண்ணாத்துரை 19 தன் நண்பர்கள் புடைசூழ, நன்றாகச் சாப்பிட்டு விட்டுக் காபிகிளப்பி லிருந்து வெளியில் வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். வருகிற வாலிபனைப் பார்த்து ஒரு பிச்சைக்காரன் "சாமி, காலணா காசு, சாமி!" என்று கேட்பான். உடனே வாலிபன் ஒரு அணாவை வீசி எறிவான். பீடாவைப் போட்டுக் கொண்டே இன்னும் கொஞ்சதூரம் சென்றவுடன் வாலிபனைப் பார்த்து இன்னொரு பிச்சைக்காரன் ஐயா...." " என்று கையை நீட்டுவான். இல்லை என்னாமல் காலணா காசு கொடுப்பான். இன்னும் கொஞ்சதூரம் சென்றவுடன் அதே வாலிபனைப் பார்த்து மற்றொருபிச்சைக்காரன் 'ஐயா.... ' என்றால் “சீ போ! போடான்னா போ!" என்று கூறிவிட்டு தன் நண்பர்களைப் பார்த்து " Nowadays I don't I agree with the Beggar problem Sir," orsor I சொல்லுவான். கொஞ்ச நேரத்தில் ஒரு வாலிப் னுடைய உள்ளம் மாறக் காண்கிறோம். முதலில் காலணா கேட்ட பிச்சைக்காரனுக்கு ஒரு அணாவை வீசி எறிந்த அதே வாலிபன்தான் மூன்றாந் தடவையாக பிச்சைக்காரனைச் சந்தித்தபோது "சீ1 போடா!!” என்று ஏசுகிறான். காரணம் காபி கிளப்பை விட்டு வெளிவந்தபோது இருந்த ஆனந் தம் மாறி, கையில் காசு குறைய ஆரம்பித்தவுடன் வழக்கமாக அவனுடைய மனம் மாத்திரம் என்ன, எவனுடைய மனமும், அந்த நிலையில் அப்படி மாறித்தானே ஆகும்! சாதாரண ஒரு பணக்கார வாலிபனுடைய நிலையே இப்படி என்றால், போக போக்கியத்தில்