பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.81
பூமி திருத்தி உண்.82
பெரியாரைத் துணைக் கொள்.83
பேதைமை அகற்று.84
பையலோடு இணங்கேல்.85
பொருள்தனைப் போற்றி, வாழ்.86
போர்த்தொழில் புரியேல்.87

மனம் தடுமாறேல்.88
மாற்றானுக்கு இடம் கொடேல்.89
மிகைப்படச் சொல்லேல்.90
மீதூண் விரும்பேல்.91
முனைமுகத்து நில்லேல்.92
மூர்க்கரோடு இணங்கேல்.93
மெல் இல் நல்லாள் தோள் சேர்.94
மேன்மக்கள் சொல் கேள்.95
மைவிழியார் மனை அகல்.96
மொழிவது அற மொழி.97
மோகத்தை முனி.98

வல்லமை பேசேல்.99
வாது முன் கூறேல்.100
வித்தை விரும்பு.101
வீடு பெற நில்.102
உத்தமனாய் இரு.103
ஊருடன் கூடி, வாழ்.104
வெட்டெனப் பேசேல்.105
வேண்டி, வினை செயேல்.106
வைகறைத் துயில் எழு.107
ஒன்னாரைத் தேறேல்.108
ஓரம் சொல்லேல்.109