பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அறிஞர் அண்ணா இரா: பொருள்படும் என்று இழுப்பானேன் கம்பரே! நீரேதான் சொல்லிவிடுமே, எனக்கு மண்டைக் கர்வம் என்று நீதி : எவரையும் வணங்காத காரணம்? இரா : அவசியம் ஏற்படாததால்! நீதி : தக்க சமாதானமா இது?

இரா : நான் மட்டுமா? எத்தனையோ மண்டலாதிபதிகள் வெற்றி வீரர்களாக. இருக்கும் வரையிலே, வணங்காமுடி மன்னர்களாகத்தான் இருந்தனர். கம் : அவர்கள் கூட, தமது இன்பவல்லிகளின் தாளிலே வீழ்ந்ததுண்டு. மஞ்சத்திலே... இரா : நமது கம்பருக்கு அந்த ரசவர்ணனையிலே அபாரத் திறமை! நீதி: மாலை நேரப் பேச்சு, காலை வேலைக்கு உதவாது. இரா : பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி மன்னர்கள், வீராதி வீரர்கள் மற்றொருவருக்கு வணங்காமல் வாழ்ந்தனர். அதுபோலத்தான் நானும் வணங்கா முடியனாக வாழ்ந்து வந்தேன். அது என் வீரத்தின் இலட்சணம் வீனார்கள் அதையே என்னைப் பழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர். கம் : அந்த வாசகத்தைப் பற்றிய விவாதத்தை விட்டு விடலாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் வணங்கா முடியன் என்ற பெயர் துரியோதனனுக்கும் உண்டு. ஆகவே, இந்தச் சில்லறைக்குச் சிந்தனையைச் செலவிட வேண்டாம். முக்கியமான விஷயத்தைக் கவனிப்போம். ஐம்புலன்களை அடக்கி, ஒடுக்கி, பரமனை வேண்டித் தவம் செய்து வந்த முனிபுங்கவர்களின் யாகயோகாதி காரியங்களை இலங்காதிபன் கெடுத்து நாசமாக்கி வந்தான். இப்பெருங் குற்றத்துக்கு என்ன பதில் கூறுவான்?