பக்கம்:நூறாசிரியம்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

நூறாசிரியம்

வல் என்பது விரைவுக் குறிப்பு.

ஈரச் சீரை இழிபு நீரோடும் ஈரமான சீலையோடும் ஒழுகும் நீரோடும்

மீளக் கொணர்ந்த திக்கனா ஒன்றே அவளை மீட்டுக் கொண்டு வந்த தீய கனவு ஒன்று.

பின்றையோர் யாமத்து - பின்னொரு நாள் நள்ளிரவில்

யாமம்- நள்ளிரவு

முந்தை மாண்ட முன்னமே இறந்து போன

தூவெண் கூறையொடு ஐஆய் விளங்கி - தூய்மையான வெள்ளைச் சிலையையுடுத்திய எம் பாட்டியார் தோன்றி.

வா என் குறிப்பின் இருவரும் தொடர - வா என்ற குறிப்புக் காட்ட யாங்கள் இருவேறாம் அவரைத் தொடர்ந்தனமாக

புறவூர் மருங்கின் தமியனை நிறுத்தி - ஊரின் புறத்தே உள்ள பகுதியில் தமியேனை நிறுத்திவிட்டு.

புறவூராவது ஊர்ப்புறம். தமியனை தனியாக எம்மை என்னும் பொருட்டு.

எம் அக்கை வலத்தோள் இட்டுவான் ஏறிய - எம் தமக்கையைத் தம் வலத்தோளில் தூக்கிக்கொண்டு வானத்தின்கண் எழும்பிச் சென்ற

அமையாக் கனவோ அம்ம இரண்டே - எம் மனத்தை உறுத்திய இரண்டாவது கனவு மற்றொன்று.

அமையா- மனத்தை உறுத்திய

அம்ம என்பது துன்ப நினைவுச் சுமையான் வந்த விளி.

ஈங்கிவை நிறைமதி இரண்டின் எதிர்ந்த- இவ் இரு கனவுகளும் இரண்டு மாதங்களில் நனவாய் நிகழ்ந்தன.

யாங்கு இனி அமைவம் தாங்கிய நாளே - அக்கொடுமையைச் சுமந்த நாளின் நினைவை இப்போது எங்ஙனம் பொறுத்துக் கொள்வேம்!

இப்போது எங்ஙனம் பொறுத்துக்கொள்வேம் என்றமையால் அற்றை நாள் கொடுமையினை உணரலாம்.

சாக்குறி காட்டிய யாக்கை உள்ளொளி - சாவு அறிகுறி காட்டிய எம் உடலின்கண் பொருந்திய உள்ளொளி.

மீக்குறி காட்டி - மேலை நிகழ்ச்சிகளை உணரும் அறிகுறி காட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/434&oldid=1211324" இலிருந்து மீள்விக்கப்பட்டது