பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மூன்றாம் பத்து

69


மிதியற் செருப்பின் பூழியர் கோவே! குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை! பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு 25

நீரறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட் பஞ்சாச் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை அயிரைப் பொருந! யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து 30

நோயின் மாந்தர்க் கூழி யாக மண்ணு வாயின் மணங்கமழ் கொண்டு கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல் ஒரீஇயின போல விரவுமலர் நின்று திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண் 35

அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்து வேயுறழ் பணைத்தோள் இவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பலவே!

தெளிவுரை : சொல்லிலக்கண நூலும், பொருளிலக் கணத்தைச் சொல்லும் நூலும், சோதிட நூலும், வேத லும், இவற்றைக் கற்று உணர்ந்து உள்ளே அடங்கிய நெஞ்சமும் என்னும் இவை ஐந்து. இவ்வைந்தினையும் ஒருங்கே போற்றியவர்: இவற்றால் அடைந்த தெளிவையே வாழ்விற்குரிய உறுதுணையாகக் கொண்டவர்; பிறவுயிர்கட்கு அவற்றால் வருத்தஞ் செய்தலைக் கருதாமல், விளக்கமுற்ற கோட்பாட்டினால், காலைக் கதிரவனைப் போலும் சிறப்புப் பொருந்தியவர்: என்றும் பொய்த்தலற்ற வாய்ம்மை உரைகளைக் கொண்டவர், முனிவர்கள். உட்குப் பொருந்திய மரபினையுடைய கடவுளைப் பரவுவதற்காக, அம் முனிவர்கள் மேற்கொண்ட வேள்வித்தீயின் சுடரானது கொழுந்துவிட்டு மேலெழும்போதெல்லாம், அவ் விருப்பமானது தம் உடலின் கண்ணும் சுடரிட்டு எழுந்து பரந்தாற்போலக் காணப்படும், பெரிய பொருளைத் தருவதான ஆவுதிப் புகையும்.

தம்பாற் பரிசில் பெறுதற்பொருட்டாக வருபவர். இவ்வளவென்னும் ஒரு வரையறையில்லாமல், தாம் வேண்டுமளவும் வயிறார உண்ணுதலை விரும்பியும், வந்த விருந்தினர்