பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvii

இளமைக் கவி :

ஒரு முறை, குளத்தூரிலிருந்து வேதநாயகரின் பெரியன்னை மகன் அடைக்கலம் என்பவர், ஓர் அலுவலாகத் திருச்சிராப்பள்ளிக்கு வந்தார். நம் வேதநாயகர் பின்வரும் கவிதையைப் பாடி, அவரை வீதியில் எதிர்கொண்டு வரவேற்றார்.

“சீர்பெருகு குளத்தூர்வாழ் அடைக்கல அண்
    ணாகருணைத் தியாகா வாநீ

ஏர் பெருகு நின் சுமுகங் கண்டு (உ) வந்தேன்
    இன்பமிகு நீயு நானும்

ஓர்திறமே உடன்பிறவாத் தோடமொன்றே
    மாமணியும் ஒளியும் போல

நேர் உறவே நிலைத்திருக்கும் எந்நாளும்
    நம்மிருவர் நேசந் தானே”

மற்றொரு முறை, தனக்கு மைத்துனன் முறையாகவுள்ள ஒருவருக்குத் திருமணம் நடைபெற்றபோது, நகைச்சுவை ததும்ப அவரை வாழ்த்திப் பின்வரும் பாடலைப் பாடினார்.

“உழவுத்தொழில் செய்து உமக்கு உடம்பெல்லாம் சேறு.
ஊத்தையைக் கழுவப் பற்றுமோ ஒன்பது ஆறு
பழங்கூழ் உமக்கு பாலுடன் சோறு
பயப்படாதிரும் உமக்கு ஆயுசு நூறு”

அரசாங்க அலுவல்:

வேதநாயகரின் ஆசிரியரான தியாகப் பிள்ளை அலுவல் பார்த்துவந்த தென் மாநில வழக்கு மன்றத்தில் கார்டன் (Mr. Gorden) என்பவர் நீதிபதியாக இருந்தார். தியாகப் பிள்ளையின் பரிந்துரையை ஏற்று, அந்நீதிபதி நம் வேதநாயகரை அந்நீதி மன்றத்திலே ஆவணக் காப்பாளராக (Record keeper) அமர்த்திக் கொண்டார். இங்ஙனம் தன் 22ஆம்