பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

பிரதாப முதலியார் சரித்திரம்

பார்த்து ““இந்த வைத்தியர்கள் கறிகளுக் கெல்லாந் தோஷஞ் சொல்லுகிறபடியால், அவர்கள் சாப்பிடும்போது, அவர்களுக்குக் கறிகள் படைக்காமல், தண்ணீருஞ் சாதமும் படையுங்கள்”” என்று ஆக்ஞாபித்தேன். அந்தப்படி ஸ்வயம்பாகிகள் உடனே நிறைவேற்றினார்கள்.

நான் சாப்பிட்டபிறகு நடந்த உபசாரங்களும் அநந்தம். இந்த உபசாரங்களை யெல்லாம் நான் அபசாரங்களென்றே நினைத்தேன். நான் ராஜாவாயிருந்து பட்ட பாடுகள் நீங்கள் காவற்கிடங்கிற்கூடப் பட்டிருக்க மாட்டீர்கள்.

““ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்“” என்பது போல, நான் பட்ட உபத்திரவங்களின் மத்தியில் உங்களை நான் மறக்கவில்லை. இந்த ஊரில் என்ன விசேஷம் என்றும், யாராவது அந்நியர்கள் வந்திருக்கிறார்களா வென்றும், நான் பொதுவாக வேவுக்காரர்களை விசாரித்தபோது, அவர்கள் “ஒரு அந்நிய தேசத்தார் வந்திருக்கிறார். அவர் மேலே பல துர்வழக்குகள் வந்திருக்கின்றன. அவர் பொழுது விடியச் சொன்னால் விடிகின்றது. விடிய வேண்டாமென்றால் விடிகிறதில்லை” என்றார்கள். அவர்கள் சொன்ன அடையாளங்களைக் கொண்டு நீங்கள் தானென்று நிச்சயித்துக் கொண்டு உடனே உங்கைளையும் மற்றவர்களையும் விசாரணைக்குக் கொண்டுவரும்படி உத்தரவு செய்தேன். நீங்கள் இருந்த கோலத்தை நான் நியாயசபையிற் பார்த்தபோது என் பிராணந் துடித்துப் போய்விட்டது. நான் மெய்மறந்து சிங்காசனத்தை விட்டுக் கீழே விழும்படியான ஸ்திதியில் இருந்தேன். ஆயினும் பூண்ட வேஷத்தைச் சரியாக நிறைவேற்ற வேண்டுமென்கிற எண்ணத்துடன் நான் மனந் திடஞ் செய்துகொண்டு உங்கள் மேல் வந்த வழக்குகளை விசாரித்தேன். அந்த விசாரணை முடிந்தபிறகு நீங்கள் கொலு மண்டபத்தை விட்டு அப்பால் போகவேண்டாமென்று ஒரு சேவகன் மூலமாக நான் தான் உங்களுக்குச்