உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

பிரதாப முதலியார் சரித்திரம்

படியால் அந்தப் புது வக்கீலுக்கு வியாஜ்ஜிய நடவடிக்கைகளைப் பார்க்க மனமுமில்லாமல் நேரமுமில்லாமல் அநேக வழக்குகள் அதோகதியாய்ப் போகின்றன. சில சமயங்களில் அந்தப் புது வக்கீலுக்கும் அந்தக் கக்ஷிக்காரன் தஸ்தூரி கொடுத்துப் பல விதத்திலும் நஷ்டமடைகிறான். தன்னுடைய வக்கீல் ஆஜராகமற் போனால் நஷ்டமடைந்த கக்ஷிக்காரன் அந்த நஷ்டத்துக்காக வக்கில் மேலே தாவா செய்ய யாதொரு தடையுமில்லை. ஒரு வக்கீலுக்காக வேறொரு வக்கீல் ஆஜராகிற வழக்கம் அக்கிரமத்திலே பிறந்து, அக்கிரமத்திலே வளர்ந்து, அக்கிரமத்திலே நிலைமை பெற்றிருப்பதால் அதை ஒவ்வொரு கோர்ட்டாரும் திக்காரஞ் செய்யவேண்டும். அந்த துர்வழக்கம் மேலான கோர்ட்டுகளிலும் நடந்து வருகிறதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அக்கிரமத்தைக் கிரமாக்கவும் கிரமத்தை அக்கிரமாக்கவும் ஒரு கோர்ட்டாருக்கும் அதிகாரமில்லை என்பது பொது விதியா யிருக்கிறது.

வக்கீல் தனக்குள்ள நேரத்தையும் சாவகாசத்தையும் தன்னுடைய சக்தியையும் ஆலோசித்து, மிதமாக வியாஜ்ஜியங்களை அங்கீகரிக்க வேண்டுமே தவிரப் பொருளாசையினாற் பல ஊர்களிலும் எண்ணிக்கையில்லாத வியாஜ்ஜியங்களை வாங்கிக் கொண்டு, ஒன்றையுங் கவனிக்க நேரமில்லாமல் திண்டாடப்படக் கூடாது. வக்கீலினுடைய சக்திக்கு மேற்பட்ட வழக்குகளை வாங்குவது கக்ஷிக்காரர்களுக்கு நஷ்டகரமாயும் வக்கீலுடைய சரீர சௌக்கியத்துக்கே குறைவாகவும் முடியும். ஒரு வழக்கை வக்கீல் அங்கீகரித்துக் கொண்டால், அது அநுகூலிக்கும் பொருட்டு வக்கீலாற் கூடிய மட்டும் பரிசிரமப்பட வேண்டும். அந்த வழக்கின் சாராம்சங்களையும் சகல சங்கதிகளையும் வக்கீல் நன்றாகக் கவனித்து, அதற்கேற்ற சட்டங்களையும் சாஸ்திரங்களையும் மேற்கோர்ட்டாருடைய சித்தாந்தங்களையும் எதிர்க் கக்ஷியின் துர்ப்பலங்களையும் எடுத்துக் காட்டி சபாகம்பமில்லாமல் வாசகதாட்டியாகவும் சமயரஞ்சிதமாகவும் வாதிக்கவேண்டும். ஆனால் நடந்த காரியங்-