பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரதாபம்

என்னும்

பிரதாப முதலியார்
சரித்திரம்


முதல் அதிகாரம்


பிரதாப முதலியார் பிறப்பும், வளர்ப்பும்,
வித்தியாப்பியாசமும், கலாப்பிரசங்கமும்.

இந்தத் தேசம் இங்கிலீஷ் துரைத்தனத்தார் ஸ்வாதீனமாகிச் சில காலத்திற்குப் பின்பு, சத்தியபுரி என்னும் ஊரிலே, தொண்டைமண்டல முதலிமார் குலத்திலே நான் பிறந்தேன். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் இந்தத் தேசத்தை ஆண்ட நபாபுகளிடத்தில் திவான் உத்தியோகம் செய்து, அளவற்ற திரவியங்களையும் பூஸ்திதிகளையும் சம்பாதித்தார். என் பாட்டனார் படித்ததும், அவருக்குத் திவான் உத்தியோகம் கிடைத்ததும், எல்லாரும் அதிசயிக்கத்தக்க விஷயமானதால், அதை நான் கேள்விப்பட்ட பிரகாரம் விவரிக்கிறேன். என் பாட்டனார் சம்பளம் கொடுத்துப் படிக்க நிர்வாகம் அற்றவராயிருந்தபடியால், அவர் சில உபாத்தியாயர்களை அடுத்து, அவர்கள் ஏவின வேலைகளைச் செய்து, கல்வி கற்றுக்கொண்டார். அவர் கல்வியில் பூரண பாண்டித்தியம் அடைந்து, யௌவன புருஷனாயிருக்கும்போது. ஒரு நாள் துலுக்கன் குதிரையினமேல் ஏறிக்கொண்டு, சத்தியபுரிச் சாலைமார்க்-

பி-1