பக்கம்:புது மெருகு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சம்பந்தச் சர்க்கரை

97

அம்மன்னருடைய மந்திரியாகிய தளவாய் ராமப்பையரே கொங்கு நாட்டுக்கு உரிய அதிகாரியாக இருந்து வந்தார். பாளையக்காரர்களிடமும் காணியாளர்களி டமும் தம்முடைய அதிகார பலத்தை வெளிப்படுத்தி வரியை வாங்குவதில் அவர் வல்லவராக இருந்தார்.

ஒருசமயம் கொங்கு நாட்டில் பஞ்சம் உண்டாகி விட்டது. பல பசுக்களையும் எருதுகளையும் செல்வ மாக வைத்துப் பாதுகாக்கும் சம்பந்தச் சர்க்கரைக்கு அந்தப் பஞ்சம் பல வகையில் இடையூறு செய்யலா யிற்று. தக்க உணவு இன்மையால் பல பசுக்கள் இறந்தன; எருதுகள் உயிரை இழந்தன.. அவற்றைக் காணப் பொறுக்காமல் பாளையக்காரர் மனஞ் சோர்ந்து போனார்.

இந்த நிலையில் அவர் செலுத்த வேண்டிய வரியை அவரால் செலுத்த முடியவில்லை. அவரைப்போலவே வேறு சிலரும் வரி செலுத்த முடியாமல் துயருற்றனர். தளவாய் ராமப்பையரிடமிருந்து தாக்கீது வந்தது. அவர்களிடம் வஞ்சகம் இல்லை; வரிகொடுக்க முடியா மல் தவித்தார்கள். தளவாயினிடம் தங்கள் குறை களை விண்ணப்பிக்கும்படி சொல்லியனுப்பினார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. கடைசியில் அந்தப் பாளையக் காரர்களைச் சிறையில் இடும்படி ராமப்பையர் கட்டளை யிட்டார். சங்ககிரி துர்க்கத்தில் அவர்கள் சிறையிடப் பட்டார்கள். சம்பந்தச் சர்க்கரையும் சிறைவாசத்துக்கு உட்பட்டார்.

2

அந்தப் புலவன் சம்பந்தச் சர்க்கரையின் புகழைப் பல காலமாகக் கேட்டிருக்கிறான். ஒருமுறை வந்து பார்த்துப் பழகவேண்டும் என்ற ஆசையை அவன்

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/102&oldid=1549611" இலிருந்து மீள்விக்கப்பட்டது