பக்கம்:புது மெருகு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சம்பந்தச் சர்க்கரை

99

பார்க்க முடியாவிட்டால் சிறை நீங்கும் வரையில் நான் சிறைவாயிலிலே தவங்கிடப்பதற்கும் சித்தமாக இருப் பேன்' என்ற அவனுடைய தீர்மானம் பின்னும் உறுதி பெற்றது. அதனைத் தடுப்பார் யார்?

சங்ககிரி துர்க்கத்தை வந்து அடைந்தபோதுதான் அவனுக்கு மனம் நிலைகொண்டது. சிறைச்சாலை இருக் கும் இடத்தைக் தெரிந்துகொண்டான். சிறைக்குள் வேறு யாரேனும் புக முடியுமா என்பதை விசாரித் தான். அவனுக்குக் கிடைத்த விடையிலிருந்து, 'நம் முடைய சங்கற்பம் நிறைவேறவும் வழி இருக்கும் போலும்' என்ற எண்ணம் உண்டாயிற்று. பாளையக் காரர்கள் சிறையிலே இருந்தாலும் அவர்களுக்கு வேண் டிய வசதிகளைத் தளவாய் ராமப்பையர் செய்வித்திருந் தார். மிகவும் முக்கியமான உறவினர்கள் அவர்களைப் பார்ப்பதற்கும் அநுமதி கிடைத்துவந்தது. எந்த இட மானாலும் புகுவதற்கு உரிமை பெற்றவர்கள் புலவர் கள். ஆகையால் அவர்களுக்குத் தடையே இல்லை.

தான் புலவனென்பதைப் புலப்படுத்திய பிறகு அவன் சிறைகாவலனது அநுமதி பெற்றுச் சிறைக் குள்ளே புகுந்தான். உள்ளே போனபோது, அங்கே பல பேர் அமர்ந்திருந்தனர். புலவர் போகும்போதே சம்பந்தச் சர்க்கரை விஷயமாக ஒரு பாடலைப் பாடிக் கொண்டே சென்றார். அதைக் கேட்டு அங்கே இருந் தவர்களுள் சிலர் சிரித்தார்கள். "சரிதான், சிறைச் சாலையிலுங்கூடவா யாசகம்? நல்ல சமயத்தில் வந் தீரே!" என்று இகழ்ச்சியாக ஒருவர் பேசினார். "யாச கனுக்குச் சிறையென்றும் வீடென்றும் பேதம் இல்லை. கொடுப்பவர்களுக்கும் அந்தப் பேதம் இல்லை. சந்திரன் தன்னை ஒருபால் ராகு பற்றிக்கொண்டே இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/104&oldid=1549613" இலிருந்து மீள்விக்கப்பட்டது