பக்கம்:புது மெருகு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

புது மெருகு

யிட்டாரே' என்று மயங்கினார்.ஆனாலும் ஆபத்து வந்தபோது அதையெல்லாம் பார்க்கமுடியுமா?

லோபா முத்திரை ஆற்றோடு போய்க்கொண்டிருந்தாள். "அட பாவி! என்னை வந்து எடுக்கக் கூடாதா?" என்று அவள் அழுதாள். "தாயே, என்ன செய்வேன்!" என்று இரக்கத்தோடு தொல்காப்பியர் வருந்தினார். 'மரம் மாதிரி நிற்கிறாயே; கரையில் இழுத்துவிடத் தெரியாதா?' என்று அவர் நெஞ்சமே கேட்டது.

லோபாமுத்திரை நீரில் மூழ்கிக்கொண்டிருந்தாள். இரண்டு வாய்த் தண்ணீரும் குடித்துவிட்டாள். கண் முன்னே ஒருவர் உயிர்விடும்போது அதைப் பார்த்துக் கொண்டு நிற்பதா? இதைவிட, அமிழ்த்திக் கொலை செய்துவிடலாமே!

'ஆபத்துக்குப் பாவம் இல்லை' என்று துணிந்து விட்டார் தொல்காப்பியர். கரையில் நின்ற ஒரு மூங்கிலை மளுக்கென்று ஒடித்தார். அதை நதியில் நீட்டினார்.லோபாமுத்திரை அதைப் பற்றிக்கொண்டு தட்டுத் தடுமாறிக் கரைக்கு வந்து சேர்ந்தாள். மூங்கிற் கோலை முறித்து நீட்டும் எண்ணம் மின்னல்போல ஒரு கணத்தில் தொல்காப்பியருக்குத் தோன்றியது. 'நாம் குருநாதனுடைய ஆணையை முற்றும் மீறவில்லை. நாலு கோல் தூரம் இல்லாவிட்டாலும் ஒரு கோல் தூரத்துக்குக் குறையவில்லை' என்று சமாதானம் செய்துகொண்டார்.

குருபத்தினியை வெள்ளத்திலிருந்து கரையேற்றாமற் போயிருந்தால் முனிவர் பிரானிடம் சென்று, 'உங்கள் பத்தினியை வைகைக்கு இரையாக்கிவந்தேன்' என்று சொல்லி நிற்பதா? தம்முடைய பத்தினியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/9&oldid=1548532" இலிருந்து மீள்விக்கப்பட்டது