பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 105 2. ஒரு பிக்குகூட இல்லாத பிராந்தியத்தில் பிக்குனி மாரிக் காலத்தில் தங்கியிருக்கக் கூடாது. 3. ஒவ்வொரு பட்சத்திலும் (மாதம் இருமுறை) பிக்குனி பிக்குகளிடம் தரும உபதேசம் பெற வேண்டும். - 4. வருஷா காலம் முடிவடையும் பொழுது பிக்கு களும் பிக்குணிகளும் கூடிய சங்கத்தின் முன்பு, மற்றவர் கண்டும், கேட்டும், சந்தேகித்தும் உள்ள விஷயங்களைப் பற்றிப் பிக்குணி விசாரணைக்கு உட் பட்டிருக்க வேண்டும். 5. பெருந் தவறு புரிந்துள்ள பிக்குணி, ஒரு பட்ச காலம் அதற்குப் பரிகாரம் தேடிக்கொண்டு, இருபாலா ரும் கூடியுள்ள சங்கத்தின் கன்மதிப்பைப் பெற வேண்டும். 6. இரண்டு வருஷா காலங்கள் முடிய இந்த விதி களில் ஆறு விதிகளை முறையாகக் கடைப்பிடித்து வந்த பிக்குனி பயிற்சி முடிந்து, இருபாலாரும் சேர்ந்துள்ள சங்கத்திடம் பிக்குணிக்குரிய முழு அந்தஸ் தையும் பெறலாம். 7. எக்காரணத்தையிட்டும் பிக்குணி ஒரு பிக்குவை ஏசவோ, கண்டிக்கவோ கூடாது. 8. பிக்குனி பிக்குகளிடம் பேசுதல் கூடாது. ஆனால் அவர்கள் அவளிடம் பேசலாம்." 를 வருஷா காலம்-மழை காலம்.