பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 புத்தர் போதனைகள் தியானத்தில் பிரவேசித்து, அதிலேயே நிலைத்திருக் கிறான். பிக்குகளே! பின்னர், இன்பத்தையும் துன்பத் தையும் துறந்து, அவன் முன் பெற்றிருந்த ஆனந்தத் தையும் சோகத்தையும் நீத்து, நான்காவது தியானத் தில் பிரவேசித்து, அதிலேயே அவன் நிலைத்திருக் கிறான்; அங்கிலை இன்ப துன்பங்கள், ஆனந்தம் ஆகியவை அற்ற நிலை-சமநிலையும், நிறைவும் கொண்ட பரிசுத்த நிலை. இதுவே கல்லமைதி எனப் படும்." மார்க்கங்களில் அஷ்டாங்க மார்க்கமே சிறந்தது. வாய்மைகளில் நான்கு வாய்மைகளே சிறந்தவை; சிலங்களில் வைராக்கியமே சிறந்தது; மக்களில் ஞானக் கண் உடையவனே சிறந்தவன்.'

  • வைராக்கியம்-ஆசைகளை வெறுத்து ஒதுக்கல்,

வெறுப்பு. ஞானக்கண்-உண்மையை ஊடுருவிப் பார்க்கும் சக்தி,